Sunday, 29 July 2012

குரு பகவான்(தேவர்களுக்கும் – ரிஷகளுக்கும் அசாறியான், பொன்னன், மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன் அந்த பிருஹச்பதியை வணக்குகிறேன்).
தெய்வீக அறிவுக்கும் – வேதாந்த ஞானத்திற்கும் – முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப் பொருளாக உள்ள கிரகம் வியாழன்.
ஒளிபடைத்த மேதைகளையும், பிரும்மத்தை உணர்ந்த ஞானிகளையும் பக்தர்களையும், சேமித்தல் இவையனைத்தும் மூலகர்த்தா இவரே ஆவார்.
பலம் படைத்த இவரது தசை இளமையில் வந்தால் கல்வியில் முதல்நிலை உண்டாகும் நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும், வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செலிப்பார்கள்.
அந்தணர்களுக்கும், பசுக்கலுகும் ஆதி மூலவர் இவர்.
இரத்தங்கள், அஸ்வங்கள், மதகஜங்கள் இவற்றைச் சித்தரிப்பவர் இவர்.
தலைவணங்காத தமைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனித குலமானிக்கமாக திகழ வைப்பார்.
நாட்டை ஆலவைப்பார் நல்லோருடன் சேர வைப்பார். புதுப்பது உத்திகளைக் காண வைப்பார் மென்மைக்கும் தன்மைக்கும் வித்தாவார் இவர்.
விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவர் ஆக்குவார். அந்தஸ்தையும் ஆற்றலையும் வாரி வழங்குவார். சிம்மக்குரலைத் தந்து பலரையும் பணிய வைக்கும் ஆற்றலைத் தருவார்.
மஞ்சள் நிறத்தவர். மந்தகாஷா முகத்தவர். இனிப்புப் பிரியர். சாத்வீகக் குணத்தவர்.
உடலில் சதை இவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபத்திர்திற்கு உரியவர் இவர் “பொன்னன்” எனும் பெயர் படைத்த இவரது உலோகமே பொன்தான்.
புஷ்பராகக் கல்லுக்குரியவர்.
கஜானாவை(வங்கியை) விளங்க வைப்பவர்.
ஆண் கிரகம் இவர். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர் வடகிழக்கு இவரது திசை.
மிக மிக மேலான சுக்கிரகம் இவர், தனுசு, மீனம் ஆகிய ராசிக்களுக்குரியவர்.
கடகம் உச்சவீடு, மகரம் நீச வீடு,
பகலில் பலமிகுந்த இவர் தனது பார்வையால் இதர கிரகங்களுக்கும் பலத்தை தருபவர். சந்திரன், அன்காகரன், சூரியன் மூவரும் நண்பர்கள், புதனும் – சுக்கிரனும் பகைவர்கள்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் இவர்.
ஜாதகத்தில் ஏனைய கிரகங்களில் நிலை சற்று ஏறாததால் இருந்தாலும் கூட இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்திருந்தால் போதுமானது. நாம் உயர்வதற்கு.
பிரஹஸ்பதி என்ற சொல்லின் பொருள் ஞானத் தலைவன் என்பது ஆகும்.
தேவகுருவான இவர் சாந்தமான உருவுடையார். சதுரப்பீடம் இவருடையது, பீதாம்பரம், வாசீகர் என்றல்லாம் திருநாமங்களுடைய இவர், லோகபூஜ்யர் என்றும் சிறப்பு பெயர்களும் கொண்டவர்.
தீக்ஷிதர், ப்ருஹஸ்பதே தாராபதே என்று தொடங்கிப் பாடும் கீர்த்தனையில் மகத்தான பல முதியவர் என்றும் கற்பகம் போல் அருள்புரியும் வள்ளல் என்றும் இறக்கமுள்ளவர் என்றும் பரிசுத்தமானவரென்றும் நிதிகளின் நிலைக்களம் என்றும் வருணிக்கிறார். இவர் எழுதிய நீதி நூல் உண்டென்றும் அது இக்காலத்தில் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுக்கிறது.
சகல சக்திகளையும் அளிக்கும் சர்வவள்ளமைப் படைத்த வியாழாதேவனை வலிபடுவோர்க்குக் குறையேது? அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ள குரு (மூலவர்) இவருக்கு அதி தேவதை, இந்திர மருத்துவான், பிரத்யாதி தேவதை பிரம்மா, வாகனம் யானை, ராசிகள் தனுசு, மீனம்.

No comments:

Post a Comment