Sunday 29 July 2012

சுக்கிரன் பகவான்


(பனி முல்லை, தாமரையும் போன்ற வெண்மையான நிரமுடையவன் அசுரர்களில் குரு எல்லாச் சாஸ்திரங்களையும், உரைப்பவனவன், பிருகுவின் புதல்வன், அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்)
அழகன அழகு ரசிகள் வினோதன் அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவன்.
காதலின் பிரதிநிதி கற்பனையின் ஊற்று, காவியமானவன். களிப்பூட்டுபவன்.
மனம் இவன், மலர் இவன் மங்கை இவன், அன்பு இவன், ஆசையும் இவனே.
நடன நாரீமனிகளை உருவாக்குவோன். நாடக கலைங்கர்களை தோற்றுவிப்போன் வேந்திரைச் சலனப் படத்திற்கு ஆதாரம் இவன். வித்தாரமான மெல்லிசைக்கு நாயகன் இவனே.
ஒரு பெண்ணின் இளம் வயதில் யோகமுள்ள இவனது திசை வந்தால் அவள் ரம்பையாக ஒழி வீசுவால். ஓர் ஆணின வாலிபப் பருவத்தில் இவனது ஆட்சி நடந்தால் அவன் கவர்ச்சியால் எல்லா இன்பங்களையும் நுகர்வான்.
பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மபோரும் அதிர்ஷ்டம் அனைத்துமே சுக்ரனால் வழங்கப்படும். குதிரைகள், யானைகள் இவற்றை விளங்க வைப்போன் இவன். வியாபாரத்தில் ஆதாயத்தை தருவான். வித்தைகளால் உலகத்தின் பாரிவையை கவர வைப்பான்.
கண்களைப் பிரதிபலிப்பான் ஜனை உறுப்புகளைக் காப்போன். சிற்றின்பத்தை நுகரவைப்போன்.
ஆடவருக்குப் பெண்டிரின் கூட்டுறவை அளிப்பான். காதலிலே வெற்றி தருவான். ஊழியாரால் உதவி பெற்றுத் தருவான்.
வாழ்க்கையின் வசதிகளை வாரி வழங்கும் ஆற்றலுக்கு நிகற்ரோன். அணிமனிகளால் அழகை அதிகமாக்குவான்.
நீர் நிலைகளில் சஞ்சரிப்போன்.
உடலில் வீரியம் இவன். புளிப்புச் சுவைபோன். பல நிரமுடையோன். ராஜஸகுனத்தோன். வாதம் சுபம். இரண்டுமே உரியோன்.
வெள்ளி எனும் பெயர் பெற்றோன். வெள்ளி உலோகத்திற்கு இவனே அதியன்.
பஞ்சபூதங்களில் நீர் இவன். அந்தன இனத்தோன்.
வைரம் இவனுக்கே உரியது.
ஆண் – பெண் பிரிவில் பெண் இவன். சுபக்கிரகமும் ஆவான். வியாழனுக்கு அடுத்த நிலை பெறுவேன். நால்வகை உபாயங்களில் சாமத்திற்கு உரியோன் தென்கிழக்கு திசையோன்.
ரிஷபம், துலாம், இரண்டும் சொந்த வீதிகள், கன்னி நீச வீட்டு, மீனம் உச்சவீதி, பரணி, பூரம், பூராடம், என்ற மூன்று நட்சத்திரங்களுக்கு நாயகன் இவன்.
சனியும், புதனும் நண்பர்கள் குருவும், செவ்வாயும், சமமானவர்கள், மற்றையோர் பகைவர், வெண்டாமரை மலரோனான் சுக்கிரன் யோகபலம் இருந்தால் வையகத்தில் பெறமுடியா இன்பம் இராது.
மிருத சஞ்சீவினி மந்திரத்தால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவன் இவன். மகரிஷி, பிருகுவின் குமாரனான இவன் புலன்களை ஒடுக்கி கடுந்தவன் புரிந்த மாதவன், ஈசனால் அற்புதமான் மந்திரங்கள் உபதேசம் செய்யப் பெற்றவன்.
சுக்கிரனை வழிபடுவதற்கென சில விதிமுறைகள் விசெடமாக் உண்டு. பிருகு புத்திரன் என்பதால் பார்க்கவன் என்றும் – மேலும் கவி, வேத, வேதாங்க பாரகன் பிரபு என்றும் பல திருநாமங்கள் இவனுக்கு உண்டு.
ஜாதகத்தில் களத்திர காரனான இவனது சுபபலத்தைத் கொண்டே வாழ்க்கைத் துணைவி, சுகயோகம் முதலான் முக்கிய அம்சங்கள் நிர்ணயிக்கப்படும்.
தீக்ஷிதர், “ஸ்ரீ சுக்ர பகவந்தம் சிந்தயாமி ஸந்த்கம்” என்று தொடங்கும் கீர்த்தனத்தில் சுக்ர மகிமைகளைக் கூறுகிறார். இவன் மகா பண்டிதன் என்றும், நாட்டைக் கொடுப்பவன் என்றும், சகல சாஸ்திர விற்பன்னன் என்றும் தத்துவமேதை என்றும் குரிப்பிடபடுகிறார்.
சகல் சுபிட்சைகளையும் வழங்கும் மகாபலம் பெற்ற சுக்ர பகவானை தினமும் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ள சுக்கிரன் (மூலவர்) இவருக்கு அத்தேவதி இந்திராணி பிரத்யதிதேவதை இந்திரன், வாகனம் கருடன், ராசிகள் – ரிஷபம். துலாம்.

No comments:

Post a Comment