Sunday 29 July 2012

புதன் பகவான்


ஞாழல் மெட்டுப் போன்ற ஒலியுடயவன் உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஷேலம்யமானவன், அந்தப் புத்தனைப் பணிகிறேன்)

கல்விக்கும் அறிவுக்கும் காரகன் புதன், கல்வியில் தேவடைந்து பட்டங்கள் பெறுகின்ற மேதைகளையும், பேச்சாற்றல் மிக்கவர்களையும் தொற்றுவிப்பவன் புதன்.
கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு எல்லாவற்றிற்குமே மூலகர்த்தா இவனே!
உன்னதமான நாடக அமைப்பு, உயர்ந்த நடன அமைப்பு ஆகியவைகளுக்குப் புதன் பலமே அடிப்படை புத்தக் வெளியீடு, நூலாக்கம் ஆகிய தகுதிகளை அழிப்பவனும் புதன் ஆவான்.
இரு பொருள்படப் பேசும் திறன், பளிச்சென்ற உச்சரிப்பு, நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு இவற்றிகுப் புத்த பலமே காரணமாகும்.
உடலில் நரம்பு இவன், நரம்பு அமைப்பு முறையின் ஆதாரம் இவன்.
பசும்புல் நிறத்தோன், பல்சுவைப் பிரியன், வார சரீரர், ராஜஸ குனத்தோன், மரகத கல்லுக்கு உரியவன் விளையாட்டு ஸ்தலங்களை விரும்பி அங்கெ வாசிப்SEVVAIபேன், தோட்டங்களில் நாட்டம் உடையோன்.
பஞ்ச பூதங்களில் மண் இவன் வடதிசைக்குரியயோன்.
ஜாதகத்தில் பாபக் கிரகத்தோடு சேர்ந்திருந்தால் பாபக் கிரக பலனைத் தருவான் புதன். சுப்கிரகத்தொடு சேர்ந்திருந்தால் சுபக் கிரக பலனைத் தருவான். யாரோடும் சேராதிருந்தால் சுபபலனைத் தருவான்.
கிரகங்களில் அலி இவன். வித்தைகளில் ஜோதிடம் இவனுக்கு விசேடமானது. குதிரை வாகனத்தோன்.
மிதுனம், கண்ணி ராசிகளுக்கு உரியவன், மீனம் நீச வீடு கண்ணி உச்சவீடு..
சூரியன் சுக்கிரன் இருவரும் இவனுக்கு நண்பர்கள், அங்காரன், குரு, சனி மூவரும் சமமானவர்கள், சந்திரன் பகைவன், பித்தளை உலோகத்துக்குடையோன்.
நான்காவது வருணத்தோன், நான்கு உபாயங்களில் பேதம் இவனுடையது.
ஆயில்யம், கேட்டில் ரேவதி என்ற மூன்று நட்சத்திங்களின் நாயகன்.
ஜாதகத்தில் உச்சம் அல்லது ஆட்சி பெற்று, சுகிரகங்களோடு சேர்ந்திருப்பது இவனது தசா அல்லது புத்தி நடக்கும் பொது, அந்த ஜாதகரை உன்னதமான நிலைக்கு உயர்த்தி விடுவான் புதன்.
பெருந்திறல் புதநெனும் பெயரினால் என்று பாகவத புராணம் புதைந்து ஆற்றலைப் போற்றுகிறது. புதனால் பிரதிஷ்டை செய்யப்பட லிங்கம் காசியில் இருக்கிறது.
கிரகபதி என்றும் இவனுக்கு பெயருண்டு, ஞானி என்றும் கூறப்படுவான்.
“புதன் ஆச்ரயாமி ஸததம்” என்று தொடங்கித் தம கீர்த்தனத்தில் புதனுடைய பிரபாவங்களைச் சொல்லுகிறார் தீக்ஷீதர். சீரும் செல்வமும் வழங்குவோன் என்றும், எப்போதும் ஆனந்தத்தோடு விளங்குபவன் என்றும் கூறுகிறார். புத மந்திரம் ஜபித்தால் கவிபாடும் திறன் வரும் என்பது பெரியோர் கூற்று.
அறிவை அளிப்பவனாதளால் புத்தி தாத்தா என்றும் தனம தருவோனாதளால் தனப்ரதன் என்றும் இவன் பாரட்டப்படுகிறவன்.
காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வாரி வழங்கும் ஆற்றல் படித்த் புதனை. இதயத்திலே இருத்தி வழிபடுவோம். நன்மை அறிவாற்றல் மிக்கவராக்க வேண்டுமென்று அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ள புதன் (மூலவர்) இவருக்கு அத்தேவதை விஷ்ணு பிரத்யாதி தேவதை, நாராயணன் வாகம் சிம்மம், ராசி – மிதுனம் கன்னி.

No comments:

Post a Comment