Sunday 29 July 2012

செவ்வாய் பகவான்


(பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன், மின்னலைப் போன்ற ஒலியுடையான், குமாரன், சக்தி ஆயுதம் தரிப்பவன், அந்த மங்களன் எனும் செவ்வாயைப் பணிகிறேன்.)
உடல் உறுதிக்கும் – மன உறுதிக்கும் காரகன் செவ்வாய்.
முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல் அதிகார்கள், நாட்டுத் தளபதிகள், நீதிபதிகள், பொறியில் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதங்களை அங்காரக பலம் இருந்தே தீரும் என்று திடமாக நம்பலாம்.
மாவீரம் படைத்த புர்த்சியாலர்களைத் தோற்றுவிப்பவன் அங்காரகன்.
பெருந்தன்மை – அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல் வைராக்கியம் பகைவரைப் பந்தாடும் பராக்கிரமம் இவற்றை அளிப்பவன் செவ்வாய்ரத்தத்திற்குக் காரகன் ரத்தக் கலப்பான சகோதரர்களுக்கும் காரகன், உடலில் எழும்பினுள் ஊன் இவன்.
நாம் பிறந்த மண்ணுக்கு அதாவது இந்தப் பூமிக்கு காரகன்.
உஷ்ணம் இவன், கோபம இவன், ராஜதந்திரி இவன் எரிபொருள் இவன், தங்கள் இவன், தாமிரம் இவன், நாகம் இவன், நாகசுப்பிரமனியம் இவன்.
என்றும் இளையோன், அரச இனத்தோன், ஆயுதம் தரிப்பான், அமைச்சனும் இவனே.
செந்நிறத்தோன், அழகன், கடும் பார்வையுடையோன், தர்போருமைப் பிரியன், பொருமையற்றவன். ஆட்டப்பிரியன், வேட்டைப் பிரியனும் கூட துனிச்சல்காரன்.
கண்டிப்பானவன், தண்டிப்பவன்.
மேல் நோக்கிப் பார்ப்பவன், காரப்பிரியன், தாமஸகுணம் கொண்டவன்,
பவழம் இவனது ரத்தினம், நெருப்புக்கூடத்தில் உளவுவோன், ஆண்மகன் தென் திசைக்குகாரகன்.
நான்குவித உபயங்களில் தண்ட உபாயத்திற்குரியவன்.
வியாழன் – சந்திரன், சூரியன் இம் மூவரும் இவனுடைய நண்பர்கள்.
புதனைப் பகையாக் கொண்டவன்.
மேஷம், விருச்சிகம் இரண்டும் சொந்த வீடுகள், கடகம் நீச வீடு, மகரம் உச்ச வீடு மிதுனம், கன்னி இவை இரண்டும் பகை வீடுகள்.
சிம்மம், தனுசு மீனம் – மூன்றும் நட்பு வீடுகள் மற்றவை சமம ஆகும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் – மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் இவன்.
ஜாதகத்தில் உச்சம் அடைந்த அங்காரகன் ஒரு கேந்திரத்தில் இருந்தானானால் அந்த ஜாதகரை இவன் வாழ வைத்தே தீருவான்.
செம்மீன் என்றும், குசன் என்றும் மறந்கலன் என்றும் பல்பெயர்கள் கொண்டவன், பூமிதேவியால் வளர்க்கப்பட்டதால் பௌமன் என்ப பெயர் பெற்றான்.
வீரபத்திரைடைய அம்சம் செவ்வாய் என்று புராணம் கூறுகிறது. இவனது ஆயுதம் கத்தி, கதை, சூலம் ஆகிய மூன்றும் ஆகும்.
தீக்ஷிதர் – அங்காரகன் ஆச்ரயாமி என்று கீர்த்தனம் தொடங்குகிறார். ஆகிய நலத்தைத் தருபவன் செவ்வாய் என்கிறார். மேலும் வணக்கி வலிபடுவோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து வைப்பவன் எளியவர்களை இரத்சிப்பவன் என்றும் புகழ்கிறார்.
இவன் முக்கோண மண்டலத்தில் அமருக்கின்ற இயல்புடையவன். “வைத்தீசுவரன் கோவில்” இவனது க்ஷேத்திரம் என்றும் தீக்ஷிதர் கூறுகிறார். சித்திரை மாதம் முதலாவது செவ்வாய்க்கிழமையில் வீரபத்திரமூர்த்தியை வழிபட்டால் செவ்வாயின் அருளும் சேர்ந்து கிடைக்கும் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்
தேசத்தைப் பரிபாலனம் செய்வோருக்கும் நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் தீப்பிழம்பு போல் அசுத்தத்தை சுட்டேரித்துத் தூய்மையை நிலைநாட்டுவாருக்கும் யாருக்கும் தலைவணங்காமல் தன்மானத்துடன் வாழ்வோருக்கும் மூலபளாக உள்ள அன்காரகளை வழிபட்டு வரமும் பெற்று விட்டால் எச்சிறப்புத்தான் நம்மை நாடி வராது?
சூரியனார் கோவிலில் உள்ள செவ்வாய் (மூலவர்) இவருக்கு அதிதேவதை பூதேவி பிரத்யதிதேவதை, சுப்பிரமணியர் (ஸ்கந்தன்) வாகனம் ஆடு, ராசிகள் மேஷம் விருச்சிகம்.

No comments:

Post a Comment