Sunday 29 July 2012

சந்திர பகவான்


(தயிர், சங்கு, பனி போன்று வேன்மையானவன், பார்கடலிலிருந்து தோன்றியவன், முயல் சின்னம் உடையவன், சேஷாமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன், சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன் அச்சந்திரனைப் பணிகிறேன்)

மனோகாரகனாக சந்திரனே உடலுக்கும் காரகனாவான், ஜோதிட சாஸ்திரத்திரன் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும்.
ஜனைn லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது.
உலக வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம், சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்சொன்ன இரண்டையுமே அடைய முடியும்.
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்பது பழமொழி நம்முடைய சுபிட்சங்களுக்குத் தாயுமாக விளங்கும் சந்திரனே தாய்க்கும் காரகனாவான், கடல் கடந்த பயணத்திற்கும், கலைச் சுவை நிரந்த ரசனைக்கும் அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு நடுநிலைமை, நறுமணம், சுகபோகம் முதலான அனைத்தும் இவனே காரகன்.
eசந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே தசை இருப்புக் கண்டு பிடிக்கப்படும். திருமணப் பொருத்தங்கள் சந்திறந்து சாரத்தைக்கொண்டே உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. முகூர்த்தங்கள் நிச்சயிக்கப்படுவதும் சந்திரனைக் கொண்டுதான்.
இந்தக் கிரகத்திற்குப் பகைவர்களே கிடையாது – ராகு, கேது என்கிற சாயாக்கிரகங்களைத்தவிர குரு-சுக்கிரன் இருவரோடு சேர்ந்தால், அல்லது பார்க்கப்பட்டால் அருளை வாரி வழங்குவது இவனது பண்பு.
இதர கிரகங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து, மனிதனை வாழ வைக்கிற அருள் என்னும் குளிர் நிலவுக்கு உரைவிடமானவன் சந்திரன்.
ரிஷபம் உச்சவீடு கடகம் சொந்தவீடு விருச்சிகம் நீச வீடு.
பகை வீடு என்று ராசியில் ஒரு வீடும் சந்திரனுக்குக் கிடையாது.
ரோகினி, ஹஸ்தம், திருவோணம். இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் ஆவான் இவன். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டைக் கொண்டே கோசாரப் பலன்கள் சொல்லப்பட்டு வருக்கின்றன.
வெண்ணிற ஆடை வெள்ளி இவற்றினை ஆள்கின்ற வெண்ணிறத்தோன் இவன். நவரத்தினங்களையும் ஆதரிப்பவன், நவரத்தினங்களில்-குறிப்பாகக், முத்து என்ற ரத்தினத்திற்கு நாயகன் உவர்ப்புச் சுவை இவனுடையது. ஆனால் குணம் இனிப்பானது.
சாத்வீக குணம் கொண்டவன்.
ஆண்-பெண் பாகுபாட்டில் பெண் கிரகம் இவன். சாலப் பிரதேசத்தில் ஆதிக்கமுடையவன். வடமேற்குத் திசை இவனுடையது.
வைசியப் பிரிவைச் சேர்ந்தவன்.
லக்கினத்திளிருந்து நான்காம் வீட்டில் இருந்தால் அதிக பலம் பெறுவான். பலவீனப்பட்ட சந்திரன் சலனத்தை உண்டாக்கக்கூடும்.
நான்கு உபாயங்களில் தானத்திற்குரிய இவன் சுபக்கிரகம் ஆவான்.
பற்று பாசம் உடையோர்க்கும். அரசாங்கம் கௌரவம் அடைவோர்க்கும், நிக்கதியாகத் தூங்குவோருக்கும் சந்திர பலம் இருக்கவே செய்யும்.
ஆரமுதுடன் அவதரித்தோன் இவன் என்பார்கள். தன கதிரோன் எனப்படும் இவன் காதல் களித்துவம், மென்மை, மெல்லியலார், இன்பம், இதயம் என்று நளினமான பல விஷயங்களுக்கும் காரகானாவான்.
பார்வைக்கு அழகான இவன் எல்லோராலும் விரும்பப்படும் ஏற்றம் உடையான்.
செல்வத்தைத் தருபவன் என்றும் வீர எழுச்சியைத் தூண்டுபவன் என்றும் இவன் புகழ் கூறுகிறது. யஜீர் வேதம்.
இறைவனது திருவிளிகளில் ஒரு வழியாக விளங்கும் இந்த சந்திரன், மூலிகைகளுக்கு அதிபன், ஆலயங்களில் பரிவார தேவதைகளிலும் இடம் பெறுவான்.
இரண்டு சக்கரங்கள் கொண்ட தேர் இவனுடையது சதுரப்பீடத்தில் அமர்வான்.
தீக்ஷிதர், “சுந்தரம் பஜமானஸ” என்று தொடங்கி இவனை பாடுகிறார். அதில் முருகனுக்கு முகமாக இருப்பவன் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தம்.
இளங்கோவடிகள் “திங்கள் போற்தும்” என்று போற்றுகிறார்.
இதயத்தயை ஆள்கின்ற தன கதிரனாகிய இவனை உபாசனை செய்தால், இவ்வுலகில் பெறமுடியாத ஐசுவரியம் எதுவுமே இருக்க முடியாது. அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ள சந்திரன் (மூலவர்) இவருக்கு அதிதேவதை, வருணன் பிரத்யதிதேவதை, கெளரிவாகனம் பத்து குதிரைகள் பூட்டிய விமானரதம், ராசி கடகம்.

No comments:

Post a Comment