Sunday, 29 July 2012

ராகு பகவான்


(பாதி உடல் கொண்டவன், பெரும் வீரன் சந்திர சூரியர்களைப் பிடிப்பவன் அசுரஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.)
அரசாங்கத்தில் பதவி – புகழ் இவற்றைப் பெறுவதற்கும் அதிகார ஆற்றலை அடைவதற்கும் உதவி புரிவான் ராகு.
உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவான். உள்ளத்தில் தெளிவைத் தருவான். அங்குமிங்கும் சுற்ற வைப்பான். அனைத்துலகிலும் பயணம் செய்ய வைப்பான்.
ஒருவரது ஜாதகத்தில் ராகு பலம் இரண்டுமே ஏற்பட்டிருக்குமானால். அப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு ராகு உயர்வைத் தந்தாலும் அந்த உயர்வுக்கு ஏமாற்றுதல் பொய் சொல்லுதல், கள்ளவழியில் நடத்தல் ஆகியவை அடிப்படைக் காரணங்களாக அமையும்.
பலம் பெற்ற ராகு, ஓர் ஆண் மகனுக்கும் பெண்கள் மூடம் சுகத்தையும் செல்வத்தையும் சேர்த்து வைப்பான்.
சூதாட்ட மன்னர்களை தோற்றுவிப்பான் ராகு, ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு. அவனது திசை பள்ளிப் பருவத்தில் வராமல் இருப்பது உத்தமம்.
சனி பகவநாக்கு என்ன என்ன குணாதிசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றவோ அவை ராகுவுக்கும் பெரும்பாலும் பொருந்தும்.
சனியும் கருப்பு, ராகுவும் சருப்பு சனியும் ஒரு பாபக் கிரகம், ராகுவும் அப்படியே.
சுப பலம் பெற்ற சனி, ஒருவருக்கு எந்த அளவுக்கு உயர்வைத் தருவானோ அந்த அளவுக்கு உயர்வைத் தருவான் ராகு.
ஆண் – பெண் இனப்பிரிவில் அலியாவான் ராகு.
தாமஸகுணத்தோன்.
தென்மேற்குத் திசைக்குரியோன். பஞ்ச பூதங்களில் வானம் இவன், நீச பாஷைகளுக்கு உரியோன் குரூர சுபாவமுள்ள இவனுக்குப் புளிப்புச் சுவை மிகவும் பிடித்தமாகும்.
கோமேதகம் ரத்தினம் அணிவோருக்கு நலம் புரிவோன்.
உலோகங்களில் கருங்கல் இவன்.
விருச்சிகம் உச்ச வீடு, ரிஷபம் நீச வீடு. கன்னி இவனுக்கு சொந்த வேற.
இந்துக்கள் அல்லாதார் இனத்துக்குரிய ராகு இன்றைய உலகில் வெளிநாட்டு கலப்புக்கு வித்தாவான்.
தந்தை வழிப்பாட்டனாருக்கும் காரகன் இவன்.
தடிப்பான பேச்சைப் பேச வைப்போன் மிலோச்ச சகவாசம் கொள்ள வைப்போன்.
சர்ப்பங்ககள், விதவைகள் இவர்களைப் பிரதிபலிப்பான்புதன் சுக்கிரன், சனி ஆகிய மூவரும் இவனுக்கு நண்பர்கள்.
குரு, சூரியன், சந்திரன், மூவரும் பகைவர்கள்.
வர்த்தகம் சுபம் இரண்டினாலும் உபாதை தரக்கூடிய இவன் உடலில் எலும்பு ஆவான்.
பாற்கடலைக் கடைந்து அமுத்மெடுத்து அதை அமரர்களுக்குப் படித்தபோது அசுரனாகிய இவன் தேவனாக உருவெடுத்துக் கொண்டு. கதிரோனுக்கு மதியவனுக்கும் இடையில் அவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதமுன்ன ஆரம்பித்தான்.
அமுதத்தைப் பரிமாரியவர் மோகினி வடிவில் இருந்த திருமால், கதிரோனும் மதியவனும் மோகினியிடம் ராகுவைக் காட்டி கொடுத்தார்கள்! உடனே மோகினி – அவன் தலையச் சக்கரன் கொண்டு சீவினான். அதனால் தலைவேறு உடல் வேராகித் தரையில் விழுந்தான் ராகு (தலையோடு ஒட்டி இருக்கைகள் மட்டும் இருந்தன).
அமுதமுண்டதால் சாகாத நிலைபெற்ற ராகு. பாம்பின் உடல் பெற்று விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து கிரக பதவி அடைந்தான். இவனைச் சாயக் கிரகம் என்பர். இது புராணக் கதை.
தீக்ஷதர். ஸ்மராம்யஹம் ஸதாராஹீம் என்று தொடங்கிப் பாடும் கீர்த்தனையில் வியாதியை தீர்ப்பவன்.
விஷ ஐந்துகளினால் ஏற்படும் அச்சத்தைப் போக்குபவன். அருள் பொழியும் ஓரவிழி நோக்குடையான் என்கிறார்.
உலகம் முழுவது சுற்று உயர் புகழ் பெறவும், பலவித மொழியினாலும் பாராட்டப்படவும். அதிகாரம் அந்தஸ்து இவற்றை இஅடையவும், பொருள் வளத்தில் செழிப்படையும் அருள் பாலிக்கும் ஆற்றல் படைத்த ராகுவைப் போற்றி வழிபடுவோம். அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ள ராகு (மூலவர்) அதிதேவதை கோதேவதை, பிரத்யபதி தேவதை சர்பபேசுவரன், வாகனம் சிம்மம்.

No comments:

Post a Comment