Sunday, 29 July 2012

கேது பகவான்


(புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன், நட்சத்திரங்கள் – கிரங்களில் தலையானவன், கோபி, கோபத்தில் உருவுடையோன், அந்த கேதுவைப் பணிகிறேன்)
மேலே குறிப்பிட்ட சுலோகப் பொருளின் ஒரு வாக்கியத்திற்கு ஒரு விளக்கம் தர வேண்டும். நட்சத்திரங்கள். கிரகங்கள் இவற்றின் சாரங்களில் இடைவெளியினை அளக்க அளவுகோல் போல் இருப்பதால் இவர்களில் மஸ்தகம் தலையானவன் என்று பொருள்.
வேதவேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்கு, எந்த ஒரு பிரச்சினையிளிருந்தும் விமோசனம் பெறுவதற்கும் காரகத்துவம் உள்ளவன்.
பரந்த உலகத்தில் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கும் விஞ்ஞான மெஞ்ஞானாத் துறைகள், அனைத்தையும் தன ஆதிக்கத்தின் கீழ அடக்கி ஆளுகின்ற ஆற்றல் உடையவன் கேது.
சிவபக்தியில் பிரியமுடையோன், செல்வத்தின் நாலாவிதக் கூறுபாடுகளோடு தொடர்புடையவன். அதீதமான தவவேல்வியில் ஈடுபடுத்துவான்.
எளிமை, கடமை இரண்டுக்குமிடையோன்.
மதக்கோட்பாடுகளிலும், பக்தி நெறிகளிலும் சிந்தையைச் செலுத்த விடுவோன்.
உலக பந்தங்களிலிருந்து விடுவிப்போன். சுபிட்சம், சௌபாக்கியம், சுகபோகம் அனைத்தையும் அளிபோன்.
வியாதியிலிருந்து நிவாரணம் தருவான், பகைவரை முரியடிக்கச் செய்வான், தேர்ந்த மருத்துவர்களை உருவாக்குவான். பசியை உண்டு பண்ணுவான் – உறவை ஊட்டுவான். கண் நோய்க்கும், புன்னுக்கும் காரணமானவன். காய்ச்சலை உடையவன் ஆவான். நாய், மான், கழுகு, சேவல் கொம்புள்ள பிராணிகள் இவற்றிக்குக் காரகத்துவம் உடையவன் ஆவான்.
சுப பலம் பெற்றிருந்தால் மேற் கூறப்பட்ட சிறப்பு அம்சங்களில் விசேதத்துவத்தை அளிக்க ஒரு நாளும் தவறமாட்டான்.
பலவீனம் உள்ள கேது உடல் வலிமையே உண்டுபன்னுவதுடன், மனநோயையும் ஏற்படுத்துவான். விபத்துக்களையும், தகாத சுகவாசத்தையும் ஏற்படுத்தித் தொல்லை கொடுப்பான்.
தாய்வழிப் பாட்டனுக்குக் காரகன் இவன்.
ஒருவருடைய ஜாதகத்தில் கேதுவின் பலம் நிறைந்திருக்கமானால், இகம், பரம என்ற இரு உலகங்களிலும் சுகம்பெறச் செய்வான் கேது.
அங்காரகனுக்கு உரிய பலன்கள் கேதுவுக்குப் பொருந்தம்.
செந்நிறத்தோல் கலப்பு நிறத்தேனும் கூட ஆண், பெண் அலி என்ற பிரிவில் அலி ஆவான் இவன். தாமஸகுணத்தோன், பஞ்ச பூதங்களில் ஜாலம் இவன், நீச பாஷைகளில் தேர்ச்சியளிப்பன். புளிப்புச் சுவைப் பிரியன். குரூர சுபாவத்தோன்.
விருச்சிகத்தில் உச்சமானவன், ரிஷபத்தில் நீசமானவன், மீனத்தைச் சொந்த வீடாகக் கொள்வோன், வைடூரியம் இவனது ரத்தினம்.
பாபக் கிரஹங்களில் ஒருவனாக கருத்தப்படும் இவன், பாப விமேர்சனத்துக்கும் அதிபதியாவான்.
புதன், சுக்கிரன், சனி இவனுடைய நண்பர்கள். குரு, சூரியன், சந்திரன் பகைவர்கள்.
மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்புதான் கேது. மகாவிஷ்ணுவை வேண்டித் தவம்புரிந்த கேதுவுக்கு அவரது அருளால் பாம்புத்தலை அமைந்தது.
மகா கேது, ஸர்வ கேது என்றும் இவனுக்கு பெயர்கள் உண்டு. கொடிபோன்ற இருக்கையில் அமர்பவன் கேது என்று கூறப்பட்டிருக்கிறது.
தீக்ஷதர், மஹாஸீராம் கேது ‘மஹம்பஜாமி’ என்று தொடங்கும் கீர்த்தனையில், மிக்க கோபமுடையோன் என்றும் ஞானியாருக்கு ஆபரனாமாக இருப்பவன் என்றும் கூறுகிறார்.
பலதரப்பட்ட உலகினரோடு பழகும் வாய்ப்பைப் பெறவும் சுபிட்சங்கள் அனைத்தையும் பெற்று அனுபவித்து சகல பந்தங்களிலிருந்து விடுதலை பெறவும் அருள் பாலிக்கும் ஆற்றல் நிறைந்த ஞானகாரகன் கேதுவை நாமும் வழிபடுவோம். அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ளது (மூலவர்) அதிதேவதை சித்ரகுப்தன், பிரத்யாதி தேவதை பிரம்மா, வாகனம் கழுகு.

No comments:

Post a Comment