Wednesday, 25 July 2012

திருமணத்தடை : சோதிட ஆய்வுலக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம்.

9 என்றால் அப்பா. அம்மா என்றால் அன்பு -அப்பா என்றால் அறிவுன்னு பாட்டெல்லாம் இருக்கு. அன்னையும்,தந்தையும் முன்னறிவு தெய்வம்னு சொல்றாய்ங்க.

எல்லாம் கரீட்டுதான். அதே சமயம் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுன்னும் சொல்லி வச்சிருக்காய்ங்க இல்லியா.

நான் மட்டும் எங்கப்பா சொன்ன மாதிரியே ஆறாங்கிளாஸ்ல காம்போசிட் மேத்ஸ் ஆப்ட் பண்ணியிருந்தா பத்தாங்கிளாஸ் தாண்டியிருக்கமாட்டேன்.

இன்டர்ல பைபிசி ஆப்ட் பண்ணியிருந்தா இன்டர் தாண்டியிருக்கமாட்டேன். 1987 ல அவர் வாங்கிட்த்தந்த வேலையில தொடர்ந்திருந்தா இன்னைக்கு மணியார்டருக்கு நாலணா கணக்குல 3 மாசத்துக்கு 4000 மணியார்டரு எழுதி ரெம்யூனரேஷன் வாங்கிக்கிட்டிருந்திருக்கனும்.

அப்பா சொன்னாப்ல ராத்திரி ஒன்பதுக்கெல்லாம் ஊட்டுக்கு போயிருந்தா உலகமே தெரிஞ்சிருக்காது ( ஐ மீன் உலகத்தோட இன்னொரு முகம் தெரிஞ்சிருக்காது)

அப்பா சொன்னாப்ல முதலியார் பெண்ணை கட்டியிருந்தா 6 மாசத்துல விவாகரத்து ஆகியிருக்கும்
(
நமக்கு களத்ர ஸ்தானாதிபதி சனி )

இதை எல்லாம் ஏன் பட்டியல் போடறேன்னா லக்னாதிபதி 9 ல உள்ளவுக மேல அப்பாவோட இம்பாக்ட் அதிகம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். அப்பாங்கறவரு 25 வருசத்துக்கு மிந்தின டெலிஃபோன் டைரக்டரி மாதிரி .அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு என்னா பண்றது?

இந்த மாதிரி கேஸுங்க சுயம் இல்லாம, சுய சிந்தனை இல்லாம, சுய தொழில் இல்லாம காலத்தை தள்ளிரவும் வாய்ப்பிருக்கு.

மாப்ளை என்ன பண்றாரு?”
அவிக அப்பாவுக்கு நிறைய சொத்திருக்கு .. மாப்ளை அப்பாவுக்கு உதவியா இருக்காரு

இந்த கான்வர்சேஷனுக்கு அப்புறம் பெண்ணை பெத்தவன் நிப்பானா?

இங்கன ஒரு உபகதை. ஒரு நல்ல வசதியான குடும்பம். அண்ணன் டம்மி. தம்பி அம்மி. தம்பி காரன் அப்பாவுக்கு துணையா இருந்து அப்பாவோட யாவாரத்தை எல்லாம் தூக்கி நிறுத்தினான். அப்பாவுக்கு தம்பிக்காரன் மேல அஃபெக்சன் வருமா வராதா? அண்ணன் காரன் மேல கடுப்பு இருக்குமா இருக்காதா?

பார்த்தான் அண்ணன் காரன். என்னால முடியாததை என் பொஞ்சாதி சாதிக்கட்டும்னு கட்டின பொஞ்சாதிய விட்டுசாதிச்சுட்டான். தம்பிக்கு அல்வா கொடுத்துட்டாய்ங்க.

அடுத்து 9 ஆமிடம் தொலை நோக்கை காட்டும். தொலை நோக்கோடு செயல்படறவுகளை பார்த்தாலே இந்த குட்டிங்களுக்கெல்லாம் டர்ரு.

ஏன்னு கேளுங்க. இவன் திட்டம்லா எப்ப சக்ஸஸ் ஆறது? எப்ப பலன் தர்ரது.. நாம எப்ப நாலு பேரு மாதிரி வாழறதுன்னு டர்ராயிருவாய்ங்க.

மாப்ளை என்ன பண்றாரு?”
பலான கம்பெனியில இருக்காரு.மாசம் பொறந்தா சுளையா பத்தாயிரம் சம்பளம்

மாப்ளை என்ன பண்றாரு?”
சொந்த யூனிட் வச்சு ஸ்ட்ரகிள் பண்ணிக்கிட்டிருக்காரு.எதிர்காலத்துல ஓஹோன்னு வருவாரு

இந்த ரெண்டு கான்வர்சேஷன்ல எது சக்ஸஸ் ஆகும்னு சொல்லனுமா என்ன? ஏன்னா பெண் வீக்கர் செக்ஸ்.அவளுக்கு இந்த மாசத்து மளிகை கடை பாக்கி இந்த மாசமே தீர்ந்துருமா அடுத்த மாசம் பலசரக்கு பிரச்சினை இல்லாம வீட்டுக்கு வந்து இறங்குமாங்கறது தான் முக்கியம்.

அடுத்து இந்த 9 ஆம் பாவம் தான் சேமிப்பு,முதலீடு இதையெல்லாம் காட்டும். இது மேல எல்லாம் ஆர்வம் உள்ளவன் அவ்ள சீக்கிரம் கண்ணால மேட்டர்ல கமிட் ஆகமாட்டான். இதனாலயும் தாமதமாகும்.

அதே போல இந்த பாவம் தொலை தொடர்பை காட்டும் ஐ மீன் தூர தேச தொடர்புகள். இந்த மேட்டர்லயும் பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வமிருக்காது. நம்ம வீடு , நம்ம அப்பார்ட்மென்ட் தாண்டி ரோசிக்கவே மாட்டாய்ங்க

அடுத்து இந்த 9 ஆமிடம் பூஜை புனஸ்காரம் ஆன்மீக குரு இத்யாதியை எல்லாம் காட்டும். தாய்க்குலத்தை பொருத்தவரை நாலு தெரு தள்ளியிருக்கிற கோவில் ஓகே. போனோமா சாமிய பார்த்தமா சாமிய பார்க்க வந்தவள்களோட நெக்லெஸ்,புடவை,சுடிதார் டிசைன்ஸை பார்த்தமான்னு வீடு திரும்பிர்ராப்ல இருந்தா ஓகே.

அதை விட்டுட்டு இறை மறை மந்திரம் உருவேத்தறேன்-குருவை தேடறேன்னு பினாத்திக்கிட்டிருந்தா மறை கழண்ட கேஸுன்னு ஃபேமிலி கோர்ட்டுக்கு போயிருவாய்ங்க. ( நம்முது ஏதோ லவ் மேரேஜுங்கறதால போக்கிடம் இல்லாததால வண்டி ஓடிருச்சு)

ஆக லக்னாதிபதி 9 ல இருந்தா 9 ஆம் பாவ காரகத்வங்கள் மேல அதீத ஆர்வம், பிடிப்பு காரணமாவே திருமணம் தடை படவும் -தாமதமாகவும் ,திருமண வாழ்க்கையில சிக்கல் வரவும் வாய்ப்பிருக்குங்கோ. இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம்.

லக்னாதிபதி 8 ல் நின்றால் திருமணத்தடை எப்படி நிகழும்னு ஏற்கெனவே விலாவாரியா எழுதினது ஞா இருக்கு.ஆனால் ஒரு சில விஷயங்கள் விடுபட்டுட்டதா ஒரு ஃபீலிங் .அதனால என் திருப்திக்கு ஒரு ஃபினிஷிங் டச்.

லக்னாதிபதின்னா ஜாதகரு. எட்டுன்னா மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி 8 ல இருந்தா ஜாதகர் செத்துப்போயிருவாருன்னு சொல்லப்படாது.

இதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு.ஜாதகர் தனியா இருக்கலாம்.தனிமைப்படுத்தப்படலாம். ஏழ்மை, நிராகரிப்பு,இருட்டு, வீண் பழி, ஊரை உறவை பிரிந்து வாழறது, கடினமான உடல் உழைப்புன்னு ஏதோ ஒரு வகையில லக்னாதிபதி 8 லிருந்து வேலை கொடுத்துருவாரு.

எட்டுல நிக்கிற எந்த கிரகமானாலும் ரெண்டை பார்க்கும். ரெண்டு வாக்குஸ்தானம். ஜாதகர் எந்த அளவுக்கு கசப்பான அனுபவங்களை பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவரோட பேச்சும் இருக்கும். நட்போ,உறவோ,வியாபாரமோ,உத்யோகமோ எல்லாத்துக்கும் அடிப்படை வாக்கு. வாக்கு சரியில்லின்னா சனம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிப்போயிருவாய்ங்க. அல்லது பல்லு மேலயே போடுவாய்ங்க. நட்பு,உறவு,வியாபாரம்லாம் கோவிந்தா..

எட்டுங்கறது இன உறுப்பை கூட காட்டும். தன்/ தான் விரும்பும் நபரின் இன உறுப்பை மட்டும் ஒருத்தன் விரும்பறான்னா அது கொய்ட் அப் நார்மல். மேலும் இவிக நிறைய சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணுவாய்ங்க. உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டருக்கெல்லாம் ப்ரைவசிம்பாய்ங்க.

இப்படியெல்லாம் ஒரு லைஃபை லீட் பண்ற பார்ட்டிக்கு கண்ணாலம் தடை படலின்னாதான் ஆச்சரியம். லக்னாதிபதி 8 ல் நின்னா எப்படிப்பட்ட பரிகாரங்களை செய்துக்கனும்னு ஏற்கெனவே விவரமா சொல்லியிருக்கன். ஞா இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே திருமணத்தடை ஆண்மை இழப்புன்னு தேடிப்பிடிங்க.

No comments:

Post a Comment