Wednesday 25 July 2012

லக்னாதிபதி 11ல் : திருமணத்தடை



அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு லக்னாதிபதி 11 ல நின்னா திருமணத்தடை எப்படி ஏற்படும்னு பார்ப்போம். இந்த 11 ஆமிடத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது இன்னாடான்னா எந்த பாவாதிபதி இந்த பாவாதிபதி/பாவத்தோட அந்த சம்பந்தப்பட்டாலும் அந்த பாவ காரகம் டபுளாயிரும்.

உ.ம் 4 ஆம் பாவாதிபதி 11 ஆம் பாவாதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டா ரெண்டு அம்மா , ரெண்டு வாகனம்,ரெண்டு டிகிரி (இது நம்ம அனுபவமுங்கோ)

லக்னாதிபதி 11 நின்னா ஒரே ஆளு ரெட்டையாயிருவாரான்னா ஆமாம். குணத்துல. டபுள் மைண்டட் ஃபெல்லோவா இருக்க வாய்ப்பு அதிகம்.

பொதுவா 11 ஐ லாபஸ்தானம்னு சொல்றோம்.லக்னாதிபதின்னாலே ஜாதகர் தான். அப்போ ஜாதகர் லாபம் பார்க்காம எதையும் எதையும் செய்யமாட்டாருன்னு சொல்லலாமா? லாபத்தை எதிர்பார்த்து செய்வாருன்னு சொல்லலாம். (மைல்டா இருக்கில்லை)

ஆக லக்னாதிபதி 11ல் உள்ளவன்ல திருமணம்னாலே சைக்கலாஜிக்கலா ஒரு மனதத்டை இருக்கும். மேலும் வரதட்சிணை,ஸ்கூட்டர் அது இதுன்னு பர்ட்டிகுலரா இருப்பாய்ங்க. இதெல்லாம் சேர்ந்து சகால (உரிய காலத்திலான) திருமணத்துக்கு ஆப்படிச்சுருது.

No comments:

Post a Comment