Tuesday 17 July 2012

நீயோ! நானோ !


நீரோடையாய் என் இளமை

இளைப்பாறிச் செல்கின்றதுன் காதல்

தேரோட்டமாய் என் வாழ்க்கை

வலி கேட்டு நகர்கின்றதுன் விழிகள்

வேரின்றிய மரம் போலென் மனது

மழைவீழ்ச்சி நீர்போல் உன் பாசம்


தீராத சமன்பாடாய் என் தனிமை

தீர்வில்லாப் பரீட்சை போல் உன் மௌனம்

யாரோடும் பேசாத உன் வழமை

யார் சொல்லும் கேட்காத என் ஆண்மை

சேற்றில் கரைந்த வைரமாய் நான்

செயலின்றிய வைராக்கியமாய் நீ

 
மான் போல நிற்காதுன் கால்கள்

மாரோடு அணைத்திடாதோ மரணம்

வீர் கொண்டு செல்கிறாய் பெண்ணே

விடையின்றிக் கொல்கிறாய் என்னை

ஏரோடும் உழவன் போலென் பாதை

எரிக்கின்ற சூரியனோ உன் பார்வை


 
கூரான விழிகளினால் கொலைகள்

குறிப்போடு தொலைகின்றதென் இதயம்

போராடும் வலி குன்றி நான்

போரின்றி வலி தருமென் பேதை

நீராக நிற்குமுன் நெஞ்சம் -என் உயிரோ

நிறைவின்றிக் காதல் பெறக் கெஞ்சும்

No comments:

Post a Comment