Saturday 21 July 2012

சே குவேராவுக்காக




நீ பிறந்த தேசம் வேறு
உன் மொழி வேறு-
தொழில் வேறு
உனக்கிருந்த ஆவல் வேறு
எங்கோ ஒரு தேசத்தில்
ஏழ்மை தெரியாமல்பிறந்த நீ -
எதிர்முனை ஆள்பவரின்
என்னச் சிறைகளை
தகற்த்தெறிந்தாய் வாய்ச்சொற்க்கள்
பேசாமல் உன்
தோள்பட்டைதோட்டாக்கள்
பேசிய வார்த்தைகள்
ஆயிரம்
தொழு நோயாளிகளுக்காய் -
நீ அலைந்த தென்னமெரிக்க
சாலைகளை விட உன்
கனவு மிகநீண்டிருந்தது-
உனக்கிருந்த ஆஸ்துமா கூட
உன்னை தாக்கிய போது
நோய்பட்டிருக்கும்
சுதந்திரமில்லா தேசங்கள்
தேடி சுதந்திரமாய்சுற்றிய நீ
கம்யூனிசம் என்பதன் ஒரே
அர்த்தம்
காம்ரேடு என்பதற்கு
முழு முகவரி
உன் பொலிவிய நாட்குறிப்பு
கூறுவது போல் ஒரு
முடிவற்ற பயணி நீ
உனக்குள் இருந்த போராளி
விழித்த போது உடன் விழித்த
தேசங்களை எண்ண விரல்கள்
போதாது.
நீ பயணம் செய்த பாதைகளில்
இருப்பவை வரலாற்று மைல் கற்கள்.
பிறந்த தேசம் வேறெனினும்
நீபோராடிய நாடு உனக்கு பதவி
தந்தது எல்லாம் தந்தது நீ
தேடிய ஒன்றை தவிற
உலக விடுதலை
காங்கோ காடுகளுக்கும்
உனைதுளைத்த அந்த
கள்ள தோட்டாவுக்கும்
வாயிருந்தால் சொல்லும்
அது பெற்ற
பெறும் பேற்றை.

No comments:

Post a Comment