Wednesday 25 July 2012

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம் 2


விரயாதிபன் எனில் 12க்குடையவன், விரயாதிபன், விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று கூறிச் சென்றுள்ளனர்.
விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12க்குடையவன் உச்சம் பெற்று நிற்க, அவனை பாக்கியாதிபன் என்று சொல்ல்க்கூடிய 9க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.
மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும் ஆகிறார். அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.
ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9ம் இடமான பாதகஸ்தானத்தில் உச்சமடைவார். அவரை 9ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லது. சனியும் பாக்கிய, யோக, பாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.
மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். அவரை 9க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.
கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது யோகம் தான்.
சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறது. பிரபல யோகமே.
கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன் பார்ப்பது யோகம் தான்.
துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன், அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9க்குடையவரும் அவரே என்பதால் யோகபலன்க‌ளைத் த‌ருவார். லக்கினாதிபதி குருவின் பார்வை அவருக்கு கிடைகுமானால் யோகம் சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment