Wednesday, 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 180


பாக்கியத்தில் வீரியத்தோனிருக்கத்தன்னை
பகரவே வெள்ளிகுரு பார்க்கநிற்க
யோக்கியமுடன் சிவதலத்தில் ஞானியாகி
யுலகுமெய்க்க மடபதியாயிருப்பானென்று
தீர்க்கமுட னவனிதனி லறியவேண்டி
செப்பினோ மிதையறிந்து செகத்தில்யார்க்கும்
ஆக்கமுடன் போகருட கடாட்சத்தலே
யவனிதனில் புலிபாணி யரைந்திட்டேனே.


ஒரு சென்மனுக்குப் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில் வீரியன் எனக் கூறப்படும் சூரியன் நிற்க அவனை சுக்கிரனும் குருவும் பார்க்கும் நிலையுண்டெனில் அச்சாதகன் மிக யோக்கியவானேயாவான். அவன் சிவ ஸ்தலத்தில் ஞானியாகி உலகமெல்லாம் மெச்சும்படியாக மடாதிபதியாய் இருப்பான். இதனைத் தீர்க்கமுடன் உலகோர் உணர வேண்டும் என்ற காரணத்தால் இதனைச் சொன்னோம். இதனை நன்கு கிரக நிலவரம் பலம் முதலியன கண்டு கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி உரைத்தேன்.

No comments:

Post a Comment