கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து
காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த
சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய
தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான
கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம்
கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல்
என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது
தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு
அம்சமாகும்.
தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான
எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச்
செழிப்பும் உண்டாகும்.
சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது.
ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு
செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக
இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும்
திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய
எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது
தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.
கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற
நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி
விற்பனை செய்யப்படுகிறது.
கோமேதகத்தின் பயன்கள்
கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய
நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால்
ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மற்றும் தேவையற்ற
பழக்க வழக்கங்கள் விலகும். பேச்சில் நிதானமும் உண்டாகும்.
தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள்
கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை,
கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை
கொண்டவைகளே. இவை சுபமானதாய கருதப்படுவதில்லை.
கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில்
கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை. என்றாலும் ஒன்றாம்
எண்ணுக்குரிய கார்னெட் கற்களை கோமேதககத்திற்கு மாற்றாக அணியலாம்.
No comments:
Post a Comment