உழைத்தால் மட்டும் போதாது. அதற்கான அதிர்ஷ்டமும்
வேண்டும். குறிப்பாக ஒருவர் தொழில் வியாபாரம் செய்து முன்னேற வேண்டும் என்றால்
ஜாதகரின் தன ஸ்தானமான 2மிடம், கூட்டு தொழில் ஸ்தானமான 7ம் இடம், தொழில் ஸ்தானமான
10ம் இடம் ஆகிய ஸ்தானாதிபதிகளும் வியாபாரம் ஆரம்பிக்கின்ற நேரம் ஜாதகருக்கு யோகம்
தரக்கூடிய காலமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஜாதகர் தொழில் தொடங்குகின்ற நேரத்தில்
ஏழரை சனியோ பாதகம் தரக்கூடிய கிரகங்களின் திசா புக்தியோ, நடைபெறக் கூடாது.
குறிப்பாக சுக்கிரனும், சனி பகவானும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வண்டும். சாதகமற்ற
காலத்தில் தொழில் தொடங்கினால் கடன், வழக்கு, எதிரிகளின் தொல்லையால் கூட ஜாதகருக்கு
வியாபாரம் நஷ்டத்தில் இயங்கும் அவல நிலை உண்டாகும்.
சிலருக்கு வேலையாட்களே துரோகம் செய்யும் நிலை
உண்டாகலாம். குறிப்பாக ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணினால் அவரின்
ஜாதகத்தை நன்கு ஆராய வேண்டும். சாதகமான நேரத்தில் சுப முகூர்த்தத்தில் தொழில்
தொடங்கினால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடைய நேரிடும். வியாபாரம்
செய்வோர் நல்ல நேரம் பார்ப்பது மட்டுமின்றி சில கிரகம் சார்ந்த பரிகாரங்களை
மேற்கொள்வதன் மூலம் அவர்களது வாழ்க்கையானது தொழிலில் வெற்றியினை அடைய
வைக்கும்.
குறிப்பாக வார நாட்களில் வெள்ளிக் கிழமை போன்ற
நாளில் சாம்பிராணி போடுவது மங்கள பூஜைகளை மேற்கொள்வது வாய்ப்புக் கிடைத்தால் கோமயம்
வியாபார ஸ்தலத்தில் தெளித்து பூஜிப்பதன் மூலம் வியாபார ஸ்தலத்தில் துர்தேவதைகள்
விலகி மகாலக்ஷ்மி கடாட்சமும் உண்டாகி ஏற்றங்கள் ஏற்படும்.
சனி, சுக்கிரன் வலிமை ஒருவருக்கு இருந்தால்
வியாபாரத்தில் பல்வேறு ஏற்றங்களை எளிதில் அடையலாம். குறிப்பாக சனீஸ்வர பகவானை மாதம்
ஒரு சனிக்கிழமை அன்று அர்ச்சனை செய்து மாதம் ஒரு வெள்ளியன்று வெள்ளை நிற
புஷ்பத்தால் சுக்கிர பகவானை பூஜிப்பது மூலம் நவ கிரக அருள் பெற்று வியாபாரத்தில்
ஏற்றங்களை அடையலாம். குறிப்பாக சிலர் எதிர்பாராத நஷ்டங்களை எதிர்கொள்ளும் நேரத்தில்
வியாபார ஸ்தலத்தில் சுதர்சன ஹோமம் மேற்கொண்டால் கஷ்டங்கள் விலகி உயர்வு உண்டாகும்.
No comments:
Post a Comment