நவகிரகங்களில் சனி பகவானை அறியாதவர்களே இருக்க
முடியாது. பகவான் ஒரு சிலருக்கு கெடுதிகளை தந்தாலும் ஒரு சிலருக்கு நற்பலனையும்
அளிக்கிறார். செல்வம், செல்வாக்கு பொருளாதார மேன்மை உண்டாக்குகிறார். சனி பகவான்
கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம்
ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல்
சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும்
கூறுவார்கள்.
கோட்சார ரீதியாக சனி பகவான் சாதகமற்று சஞ்சரித்தால் கெடு பலன் மட்டும்தான் தருவார் என்பதில்லை. சனி ஜெனன ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் கோட்சாரத்தில் கெடுதியான ஸ்தானங்கள் இருந்தாலும் அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.
2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரிவு, மந்தமான சூழ்நிலை, வீண் வாக்குவாதம், தந்தை சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
3ல் இருந்தால் இளைய சகோதர தோஷம் என்றாலும் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.
4ல் இருந்தால் கல்வியில் இடையூறு தாய்க்கு தோஷம் அசையா சொத்து அமைய இடையூறுகள் சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.
5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.
7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.
8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.
10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.
11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.
12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.
சனி பலமிழந்து இருந்தால் கெடு பலன்களை கொடுத்தாலும் சிலருக்கு ஏற்றமிகு வாழ்க்கையும் தருவார் என்பதே பொது விதி.
No comments:
Post a Comment