Monday, 27 August 2012

நவரத்தினங்களில் பவழம்



பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும். இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும். சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன. கடினமான பாறைகளின் மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும். பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும். நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன் காணப்படும். பவழத்திற்கு ஆங்கிலத்தில் கோரல் என்று பெயர்

பவழத்தின் அமைப்பைக் கொண்டு 6 அல்லது 8 கிரகங்கள் உடையதென இரு வகையாக பிரிக்கப்படுகிறது. சிவப்பு பவழமானது 8 காரங்கள் பிரிவைச் சார்ந்ததாகும். முன்பு நம் நாட்டு கடல் பகுதிகளில் பவழம் நிறைய கிடைக்கப் பெற்றது. தற்போதோ இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. பவழம் குடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது.

பவழத்திற்கு 6 குற்றங்கள் உண்டு. அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது. பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும். பவழத்தில் நாள் பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும். இந்த கற்கள் பவழம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவழம் என்று எண்ணிவிடக்கூடாது.

செந்நிற கிரகமான செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களான மேஷ, விருச்சிக ராசிக்காரர்களும், எண் கணிதப்படி 9,18,27 ம் தேதிகளில் பிறந்தவர்களும் பவழத்தை அணியலாம். இதைத் தவிர மருத்துவ ரீதியாகவும் பவழத்தை அணிந்தால் இர்த சிகப்பணுக்கள் கூடுகின்றது. உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது. செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவழக்கல்லை அணியலாம். பவழத்தை தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது.

கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவழக்கல்லை அணிவதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். பவழம் தடைகளையும் விபத்தையும் தவிர்க்கும். சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

No comments:

Post a Comment