Tuesday, 28 August 2012

அலமாரி


ஒரு வீட்டின் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கு கபோர்டு மற்றும் செல்ப் அமைக்கிறார்கள். அவை எந்த திசையில் அமைத்தால் வாஸ்து ரீதியாக நல்லது என பார்க்கும் போது தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் அமைப்பது மிகவும் சிறப்பு பொதுவாக தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் பரனை அமைத்து அதற்கு கீழ் செல்ப் அமைப்பது மிக சிறப்பு. தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் செல்ப் அமைக்கும் போது தென் கிழக்கு மூலை மற்றும் வடமேற்கு மூலையில் சற்று இடம் விடுவது மிகவும் சிறப்பு. குறிப்பாக வடக்கு ஒட்டிய மேற்கு திசையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு திசையிலும் மூன்று அடி விட்டுவிட்டு செல்ப் கட்டுவது அனுகூலமான அமைப்பாகும். பொதுவாக மேற்கு மற்றும் தெற்கு திசையில் செல்ப் அமைக்கும் போது ஏதாவது ஒரு திசையில் மட்டும் செல்ப் கட்டி விட்டு மற்ற இடங்களை காலியாக விட்டால் அதுவும் தென்மேற்கு மூலையை சற்று காலியாக விட்டால் அங்கு பீரோ மற்றும் பணப்பெட்டி வைப்பதற்கு வசதியாக இருக்கும். அது மட்டுமின்றி ஒரு புறம் செல்ப் கட்டி விட்டு மற்றொரு புறத்தை காலியாக விட்டால் கட்டில் போடுவதற்கு வசதியாக இருக்கும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் செல்ப் அமைக்கவே கூடாது. அதுவும் வடகிழக்கு திசை, கிழக்கு ஒட்டிய வடக்கு பகுதி, வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியில் கண்டிப்பாக செல்ப் அமைக்க கூடாது. ஏனென்றால் அந்த இடங்களில் அதிக எடை கொண்ட பொருட்கள் இருக்க கூடாது என்ற காரணத்தால் காலியாக விட்டு விட வேண்டும் என்பதாலும் வடக்கு மற்றும் கிழக்கு சுவற்றில் செல்ப் கட்டாமல் இருப்பது நல்லது. அப்படி கட்டியே ஆக வேண்டும் என்றால் தென்கிழக்கு திசையிலும், மேற்கை ஒட்டிய வடக்கு திசையிலும் செல்ப் அமைக்கலாம். சமையலறையில் செல்ப் அமைக்கும் போது கண்டிப்பாகத் தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் செல்ப் அமைப்பது சிறப்பு.

No comments:

Post a Comment