Monday, 27 August 2012

பெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும், அசையா சொத்து



பெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும், அசையா சொத்து

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு அவளுக்கு அமையக்கூடிய சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றியும், அவளது அறிவாற்றல் பற்றியும், கற்பு நிலை பற்றியும் அறியலாம்.

மனிதராய் பிறந்தவர் அனைவருமே சுகமான வாழ்க்கை வாழ்வதைத்தான் விரும்புவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் அமையுமா? என்றால் அதுதான் இல்லை. பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் சுபகிரககங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் 4ல் இருந்தாலும், 4ம் வீட்டை பலமாக பார்வை செய்தாலும் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக சுகக் காரகன் சுக்கிரன் வலிமையாக அமையப் பெற்றிருந்தால், அனைத்து விதமான ஆடம்பரப் பொருள்களும், மற்றும் பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் குறைவில்லாமல் கிடைக்கப்பெறும்.

ஆகவே 4ம் வீட்டில் பாவக்கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் அப்பெண்ணிற்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். 4ல் கொடிய கிரகங்களான சனி, ராகு அமையப் பெற்று பகை பெற்றிருந்தால், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் நிம்மதி இருக்காது.

பெண்களின் ஜாதகரீதியாக 4ம் வீட்டைக் கொண்டு அவர்களின் ஒழுக்கம் பற்றியும், கற்பு நெறி பற்றியும் அறிந்து கொள்ளலாம். பெண்ணானவள் நெருப்பைப் போல வாழ்ந்தால், எந்தக் கெட்ட சகவாசகங்களும் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். நெருப்பை நீர் அணைக்குமே என தர்க்கம் பேசாமல் நல்ல வழியில் நடந்து கொண்டால், அந்தப் பெண்னை சந்ததியினரும் பின்பற்றுவார்கள். நவகிரகங்களில் சுபகிரகங்களாகிய குரு, சுக்கிரன், வளர்பிறை, சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்னத்திற்கு 4ம் வீட்டிலோ, சந்திரனுக்கு 4ம் வீட்டிலோ அமையப் பெற்றால் பண்புள்ள பெண்ணாகவும், நல்ல குணவதியாகவும் இருப்பாள்.


இன்றைய சூழலில் வீடு, வாகன யோகம் என்பதை ஏழைமுதல் பணக்காரர் வரை அடைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் அதிபதியும், சுக்கிரனும் பலமாக அமைந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அசையும், அசையாச் சொத்து யோகம் சிறப்பாக அமையும். அதுவே 4ம் அதிபதியும் சுக்கிரனும் 6,8,12 ல் மறைந்தோ, பாதக ஸ்தானத்தில் அமைந்தோ பாவக்கிரகச் சேர்க்கையுடன் பலஹீனமாக இருந்தால், அவளின் பெயரில் சொத்துக்கள் அமையாது. அப்படி அமைந்தாலும் அபிவிருத்தியாகாது.

No comments:

Post a Comment