வாஸ்து என்பது வாழ்வில்
முக்கியமானதாகிவிட்டது. அந்த காலத்தில் வசிக்கும் இடங்கள் தாராளமாக இருந்ததால்
வீட்டைச் சுற்றிலும் தாழ்வாரங்கள் அமைந்திருக்கும். இதில் காய் கறிகளை கூட பயிர்
செய்து கொள்வார்கள். மழை காலங்களில் இந்த தாழ்வாரங்களால் வீடு மண் சுவற்றால்
கட்டப்பட்டதாக இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்புடன் இருக்கும்.
தற்போதைய சூழ்நிலை அப்படி இருக்கிறதா என்று பார்த்தால் இரண்டு பேர் வசிக்கும்
இடத்தில் ஐந்து பேர் கூட வசிக்கும் சூழ்நிலை உள்ளது. சொந்த வீடு என்பதே ஒரு கனவாக
வாழும் மனிதர்கள் மத்தியில் நகரங்களில் சொந்த வீட்டில் வாழுவோருக்கு தாம் வாழும்
இடத்திற்கேற்ப வாகனங்கள் நிறுத்துவதற்கும், கட்டிடம் பார்ப்பதற்கு பார்வையாக
இருப்பதற்கும் ஏற்ற வகையில் போர்டி கோ என்ற ஒன்றை அமைத்து கொள்கிறார்கள்.
இந்த
போர்ட்டி கோக்கள் கட்டிடத்தின் முழு நிளத்திற்கும் அகலத்திற்கும் ஏற்றவாறு அமைக்கப்
படுவதில்லை. தங்களின் தேவையை கருதியும், சிக்கனத்தை முன்னிட்டும் போர்டிகோ வை
அளவிற்கேற்ப அமைத்து கொள்கிறார்கள். மண்தரையாக இல்லாமல் சிமெண்ட் கான்கிரேட்
போட்டு அமைத்தாலும் போர்டிகோவும் கட்டிடத்தின் முக்கிய அங்கமாகவே உள்ளது. இட
நெருக்கடி நிறைந்திருந்தாலும் சிறுக கட்டி பெருக வாழ் என்பதற்கேற்ப அமைக்கும்
போர்டிகோ வை வாஸ்துபடி அமைப்பதே நல்லது.
வாஸ்து சாஸ்திர ரீதியாக ஒரு வீட்டிற்கு போர்டி
கோவை எங்கு அமைப்பது சிறப்பு என பார்க்கின்ற போது ஒவ்வொரு திசைக்கும் உள்ள உச்ச
ஸ்தானத்தில் அமைப்பது நல்லது.
வடக்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு உச்ச
ஸ்தானமான வடகிழக்கு மூலையில் அதாவது ஈசான்யத்தில் போட்டி கோவை அமைப்பது மிகவும்
சிறப்பாகும். முடிந்த வரை வடகிழக்கை ஒட்டியே அமைப்பது நல்லது. வடமேற்கு பகுதியில்
போர்டிகோவை அமைப்பது நல்லதல்ல.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான
ஈசான்யத்தில் அதாவது வடகிழக்கு மூலையில் போட்டி கோவை அமைப்பது மிகவும் சிறப்பு
முடிந்த வரை வடகிழக்கை ஒட்டியே அமைப்பது நல்லது. தென்கிழக்கு அக்னி மூலையில்
கிழக்கு பார்த்த வீட்டிற்கு போர்டு கோ இருக்க கூடாது.
தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான கிழக்கை
ஒட்டிய தென்கிழக்கு பகுதியில் போர்டிகோ அமைப்பது மிகவும் சிறப்பு.மேற்கை ஒட்டிய
தெற்கு பகுதியில் அதாவது தென்மேற்கு பகுதியில் போர்டி கோவை அமைக்க கூடாது.
மேற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான
வடமேற்கு பகுதியில் அதாவது வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் போட்டி கோவை அமைப்பது
நல்லது. மேற்கை பார்த்த வீட்டிற்கு நீச்ச ஸ்தானமான தென்மேற்கு பகுதியில்
போர்டிகோவை அமைப்பது நல்லதல்ல.
மேற்கூறிய எந்த திசையில் போர்டிகோவை அமைத்துக்
கொண்டாலும், அதன் மேற்கூரையானது எத்தனை அடி உயரத்தில் இருக்க வேண்டும் என
பார்க்கின்ற போது வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு போர்டி கோவின்
கூரையானது கட்டிடத்தின் கூரையை விட சற்று உயரம் குறைவாக இருப்பதும், சூரிய
வெளிச்சம் உள்ளே வரும் படி அமைப்பதும் சிறப்பு.
தெற்கு மற்றும் மேற்கை பார்த்த வீட்டிற்கு
அமைக்கும் போர்டிகோ வின் கூரையானது கட்டிட கூரை எந்த உயரத்திலிருக்கின்றதோ அதே
உயரத்தில் இருப்பது நல்லது. மேல் தளம் கட்டுகின்ற போது தெற்கு மேற்கு பார்த்த
வீடுகளுக்கு அமைக்கும் போர்டி கோவிற்கு மேலே கட்டிடம் கட்டுவதும் நல்லது
தான்.
இப்படி மேலே அமைக்கும் இடத்திற்கு பால்கனி என்று
பெயர். பால்கனி மேலுள்ள வீட்டுடனேயே சேர்ந்திருக்கும் முன்பகுதியாகும் தற்போதுள்ள
இடபற்றா குறைகளில் பால்கனியுடன் வீடு இருப்பது மிகவும் சௌகர்யமான அமைப்பாகும்.
சாயங்கால வேளைகளில் உட்கார்ந்து காற்று வாங்க, ரோட்டில் வருவோர் போவரை வேடிக்கைப்
பா£க்க, துவைக்கும். துணிகளை உலர்த்த, பூச்செடிகள் வளர்க்க என பலவற்றிற்கும்
பால்கனி உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு திசைக்கும் போர்டி கோவை எப்படி உச்ச ஸ்தானத்தில்
அமைக்கின்றோமோ அதுபோல பால்கனியை அமைப்பதும் சிறப்பு.
தெற்கு மற்றும் மேற்கு திசையில் அமைய கூடிய
பால்கனிகள் முடிந்தவரை சிறிதாக இருப்பதும் கிரில் போன்றவற்றால் மூடி வைப்பதும்
நல்லது.
வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அமைய கூடிய
பால்கனிகள் சற்று விசாலமாக இருப்பதும் முடிந்த வரை திறந்தே இருப்பதும் சிறப்பு.
No comments:
Post a Comment