காதல் திருமணம், கலப்புத் திருமணம்
மனதில் இடம்பிடித்தவரை வாழ்க்கைத் துணையாகச்
சேர்த்துக் கொள்வதில்தான் பெண்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. காதல் என்பது ஒன்றும்
தீண்டதகாதது அல்ல. காதல் திருமணம் என்பதும் தற்போது பெற்றோர்களின் சம்மதத்துடனேயே
நடைபெறுகிறது. நம் பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கக்கூடிய
பெற்றோர்கள் பெருகிக் கொண்டே வருகிறார்கள்.
காதல் திருமணத்தில் மதம், இனம் மொழி அனைத்தும்
ஒன்றோடு ஒன்று கலந்து விடுவதால் இதில் ஏற்றத்தாழ்விற்கோ, பிரிவினைக்கோ இடம்
இருக்காது. இப்படி காதலித்தவரையே கைபிடிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும். என
பார்க்கும் போது ஜாதக ரீதியாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ
இருந்து உடன் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், 5,7ல் சனி, ராகு,
கேது போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் அதிபதியும், சுக்கிரன் செவ்வாயும் ஒரு
பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றோ, சாரம் பெற்றோ இருந்தாலும்,
பருவ வயதில் மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் காதல் திருமணம், கலப்பு
திருமணம் நடைபெறம்.
பொதுவாக செவ்வாயும் சுக்கிரனும், 7ம் அதிபதியும்
சர்பகிரக நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம்
போன்றவற்றில் அமையப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.
No comments:
Post a Comment