Saturday, 25 August 2012

நட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்?


 



உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் உயிர் போன்றது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. சுத்தமான நீரை குடிக்கவும் முடியவில்லை. உடல் நிலையில் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ஆயிரத்தில்ஒருவர் தான் சொல்ல முடியும். பிறக்கும் குழந்தைகள் கூட கருவிலேயே நோய்களை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது.
 
தினமும் டயட் என்ற பெயரில் உண்ணும் உணவிற்கு கூட பட்டியலிட வேண்டியது இருக்கிறது. ஆனால், ஜோதிட ரீதியாக ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு கிரகங்கள் பலமாக அமைந்து விட்டால் நோய் வந்தாலும் அவை உடனே சரியாகி விடக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது.
 
பொதுவாக ஜெனன ஜாதகம் சிறப்பாக அமைந்து விட்டால் ஆரோக்கியமான வாழ்வு உண்டாகிறது. கிரக நிலைகள் மட்டும் இன்றி பிறந்த நட்சத்திர ரீதியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 27 நட்சத்திர காரர்களும் எந்த எந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் மனக்குழப்பவாதியாக இருப்பார்கள். 8, 16 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 10 வயதில் விரோதிகளால் கண்டமும், 13 வயதில் கண்களில் பாதிப்பும், 21 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 37 வயதில் தேவையற்ற பெண்களின் சகவாசத்தால் கண்டமும், 40 வயதில் வண்டி வாகனங்களால் ஆபத்தும் 45 வயதில் அரசு வழியில் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் ஜுரமும், 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பும், 22 வயதில் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலையும், 25 வயதில் நாய்க்கடியால் பாதிப்பும் 27 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 30 வயதில் பால்வினை நோய்களும் 50 வயதில் சர்க்கரை நோயும் 53 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும், 59 வயதில் மூல வியாதியும் 64 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புண் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் நீரால் கண்டமும், 7 வயதில் நெருப்பாலும் 10 வயதில் உயரமான இடத்திலிருந்து தவறி விழுவதால்கண்டமும் உண்டாகும். 11 வயதில் வண்டி வாகனங்களால் விபத்துக்களும் 21 வயதில் பால்வினை நோய்களும் 50, 55 வயதில் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், 60 வயதில் மூல வியாதியால் பாதிப்பும் உண்டாகும்.

ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 5, 7 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பும், 9 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும், 32 வயதில் உஷ்ண நோயும் 55 வயதில் திருடரால் கண்டமும், 57 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பும் 65, 69 வயதுகளில் ஜல தொடர்புடைய பாதிப்பும் உண்டாகும்.

மிருக சீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் தண்ணீரால் கண்டமும் 8 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பும் 10 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 19 வயதில் ஆயுதங்களாலும் 21 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 33 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலையும் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் அம்மையாலும் 12 வயதில் நாய்க்கடியாலும் 16 வயதில் விஷத்தாலும் 18 வயதில் மேலிருந்து தவறி விழுவதாலும் 33 வயதிலும் 47, 55, 60 வயதுகளில் மூலம் மற்றும் வயிற்று போக்காலும் கண்டம் உண்டாகும்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் வலிப்பு, 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை, 6 வயதில் ஆயுதங்களால் 15 வயதில் தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தால் 25 வயதில் அம்மை நோயால் 39 வயதில் வாத நோயால் 55, 68 வயதுகளில் நெருப்பு மற்றும் வயிற்று போக்கால் கண்டம் உண்டாகும்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஆயுதங்களால் 7 வயதில் அம்மையால் 12, 16 வயதுகளில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும். 25 வயதில் தேவையற்ற நண்பர் சகவாசத்தால் 33 வயதில் திருடர்களால் 46 வயதில் நெருப்பு போன்றவற்றால் கண்டம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரமும் 5 வயதில் நரம்பு தளர்ச்சியும், 14 வயதில் அம்மை நோயும்,16 வயதில் நீராலும் 25 வயதில் விஷத்தாலும் கண்டம் உண்டாகும். 45 வயதில் வண்டி வாகனங்களால் 55 வயதில் வாதம் போன்றவற்றால் 64, 68 வயதுகளில் நீரிழிவு நோய் கண்டம் உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் 7 வயதில் அம்மை நோயும், 9, 15 வயதில் விஷம் போன்றவற்றாலும் 20, 24 வயதுகளில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் 40, 47 வயதில் நாய்க் கடி போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும். 50 வயதில் திருடர்களாலும் 56 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் விஷக் கடியாலும், 7 வயதில் அம்மையாலும் 8 வயதில் வயிற்று போக்காலும் 14 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் நெருப்பாலும் 5 வயதில் அம்மையாலும் 7 வயதில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும் 14 வயதில் மிருகங்களாலும் 19 வயதில் விஷத்தாலும் 32 வயதில் ஆயுதங்களாலும் 45 வயதில் உயரத்திலிருந்து தவறி விழுவதாலும் 55 வயதில் வலிப்பு நோயாலும் கண்டம் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜலத் தொடர்புடைய பாதிப்புகளும் 5 வயதில் மரம் முறிந்து மேலே விழுவதாலும் 25 வயதில் திருடர்களாலும் 33 வயதில் வண்டி வாகனங்களாலும் 50 வயதில் வாத நோயாலும், 57 வயதில் நம்பியவர்களே துரோகம் செய்வதாலும் 68 வயதில் தீராத வியாதிகளும் ஏற்பட்டு கண்டங்கள் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் 7 வயதில் அம்மை நோயும் 12 வயதில் விஷக் கடியாலும் 14 வயதில் உயரமான இடங்களில் இருந்து தவறி விழுவதாலும் 18 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 25 வயதில் வாதத்தாலும் 48 வயதில் நெருப்பால் கண்டமும் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 4 வயதில் அம்மை நோய் 7 வயதில் வண்டி வாகனங்கள் கண்டம் 12 வயதில் உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை 15 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 25 வயதில் பால்வினை நோய்கள் 47, 54 வயதுகளில் வாதம் நீரிழிவு பிரச்சனைகள் 65 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை 3 வயதில் வயிற்றுப் போக்கு 56 வயதில் ஆயுதங்களால் பாதிப்பு 68 வயதில் வாத நோய் உண்டாகும்.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் கை கால்களில் சிரங்கு 13 வயதில் நாய்க்கடி 22 வயதில் பால்வினை நோய் 28 வயதில் வண்டி வாகனங்களால் பாதிப்பு, 33 வயதில் எதிரிகளால் 40 வயதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 44 வயதில் வாத நோய் 55 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு கண்களால் பாதிப்பு, 7 வயதில் நாய்கடி, 13 வயதில் விஷத்தால் கண்டம் 21 வயதில் ஜலத்தால் கண்டம் 22 வயதில் பெண்களால் கண்டம் 30 வயதில் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகள் 50 வயதில் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 12 வயதில் நாய்க் கடியாலும் 20 வயதில் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுவதாலும் 44 வயதில் நாய் கடியாலும் விரோதிகளாலும் 64 வயதில் வயிறுமற்றும் இருதய சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 75 வயதில் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாலும் கண்டம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4 வயதில் அஜீரணக் கோளாறும், 9 வயதில் மிருகங்களாலும் 11 வயதில் வயிற்று போக்காலும் 19, 22 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 30, 34 வயதுகளில் அரசாங்கத்தாலும் விரோதிகளாலும் 40, 45, 57 வயதுகளில் பக்கவாதம் போன்றவற்றாலும் பாதிப்பு உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறும், 5 வயதில் சிரங்கும், 7 வயதில் கண்களால் பாதிப்பும் 13 வயதில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் 16 வயதில் நாய்க்கடியாலும் 27 வயதில் பால்வினை நோயாலும் 28 வயதில் ஆயுதங்களாலும் 35 வயதில் எதிரிகளாலும் 44 வயதில் நெருப்பால் 55 வயதில் வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோயால் பாதிப்பு உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 வயதில் ஜுரத்தாலும் 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளாலும் 16 வயதில் விஷக் கடியாலும் 22 வயதில் பால்வினை நோயாலும் 36 வயதில் எதிரி மற்றும் திருடர்களாலும் 75 வயதில் உடல்நிலை பாதிப்பாலும் கண்டம் உண்டாகும்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 5 வயதில் ஜுரம், 7 வயதில் ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்பு 13 வயதில் உயரமான இடங்களில் இருந்து விழுவதால் 16 வயதில் நாய்க்கடியால் 22 வயதில் விஷத்தால் 28 வயதில் பெண்கள் தொடர்பால் 36 வயதில் ஜுரத்தால் கண்டம் உண்டாகும்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் ஜுரத்தால் 5ல் வண்டி வாகனங்களால் 9 வயதில் ஜலத்தால் 23 வயதில் விஷத்தால் 57, 61 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் கண்டம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு 5 வயதில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்பு, 7 வயதில் அம்மை, 22 வயதில் பெண்களால் 33 வயதில் திருடர் மற்றும் ஆயதத்தால் 42 வயதில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையால் 50, 55 வயதில் வாத நோயால் கண்டம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3 வயதில் அஜீரண கோளாறு, 15 வயதில் மிருகத்தால் 25 வயதில் பால்வினை நோயால் 30, 35 வயதில் நெருப்பால், 60 வயதில் வயிறுசம்மந்தப்பட்ட பாதிப்புகளால் கண்டம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7 வயதில் உயரமான இடத்திலிருந்து விழுவதால் 12 வயதில் விஷத்தால் 20, 25 வயதுகளில் பெண்களால் 42 வயதில் திருடர்களால், 48, 51 வயது வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் 52 வயதில் மூல வியாதிகளால் 55, 58 வயதுகளில் வாத நோய்களால் கண்டம் உண்டாகும்.

ஒவ்வொரு நட்சத்திரதாரர்களும் மேற்கூறிய வயதுகளில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment