துலாம்(சித்திரை
3,4, ம் பாதம். சுவாதி, விசாகம் 1,2 3ம் பாதம்)
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிர பகவானாவார். கால
புருஷனின் அங்க அமைப்பில் அடி வயிற்றில் பாகத்தை குறிக்கும் மூன்றாவது
சரராசியாகும். சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,23 பாதங்களிலும்
பிறந்தவர்கள் துலாராசியாக கருதப்படுவார்கள். இது ஒரு சுப ராசியாகும். துலா ராசி
பகலில் வலுப்பெற்றதாக இருக்கும்.
உடலமைப்பு,
உடலமைப்பு,
துலா ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே
அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக
தோற்றமளிப்பார்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து
கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள்
அகன்றும் இருக்கும். சிரித்தால் இருபுறங்களிலும் அழகாக குழி விழும். இவர்களுக்கு
சிறுவயதில் சிறு சிறு கண்டங்கள் ஏற்பட்டாலும் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள்.
மூக்கும் முழியுமாக அழகாக தோற்றமளிப்பார்கள். உதடுகள் அழகாக அமைந்திருக்கும்.
குண அமைப்பு,
நேர்மையே குறிக்கோளாக கொண்டவர்கள் துலா
ராசிகார்கள். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப் போலவே
மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம்
அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட
உதவுகிறதோ அதை போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள். வசீகர
தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன
நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல்
கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவார்கள்.
வாக்கு சாதுர்யம் கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பதென்பது இயலாத காரியமாகும்.
வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாக பேசும் இவர்கள் வீட்டில் ஒன்றுமே
தெரியாதவர் போல இருப்பார்கள். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால்
தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள்.
மணவாழ்க்கை,
துலா ராசிக்காரர்களின் மண வாழ்க்கையான
திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள்
எப்பாடுபட்டாவது சுயகௌரவத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்களுக்கு அமையும்
வாழ்க்கைத் துணையும் நல்ல அறிவாற்றலுடன் அமைதியான குணத்துடனும் ஒருவரை ஒருவர்
விட்டுக் கொடுக்காத பண்புடனும் அமையும். இவர்களுடைய தேவைகளை முன்கூட்டியே அறிந்து
வரவுக் கேற்றவாறு குடும்பம் நடத்தி சிக்கனமாக நடந்துகொள்வார்கள். காலமறிந்து
உணவளிப்பது எவ்வளவு மனகுறைகள் ஏற்படினும் அனுசரித்து நடப்பது, ஒருவர் கோபப்பட்டால்
ஒருவர் அமைதி காப்பது போன்றவற்றால் குடும்ப சூழல் மிகவும் சிறப்பாக அமையும். மன
வேற்றுமையோ, வெறுப்போ ஏற்படாமல் நடந்து கொள்வார்கள். விருப்பத்திற்கேற்றவாறே
வாழ்க்கை துணையும் அமைவதால் பிரச்சினைகளற்ற வாழ்க்கை அமையும்.
பொருளாதார
நிலை,
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள்
ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்பே செலவுகள் வாயிற்
கதவை தட்டும். குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருப்பதால் சேமிக்க முடியாமல்
போகும். என்றாலும் இவர்களின் தேவைக்கேற்றபடி பணவரவுகள் வந்து கொண்டுதான் இருக்கும்.
ஏழை, எளியவர்களுக்கு இல்லை என்று வருபவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். சிறு வயதில்
கஷ்டங்களை சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும்,
குடும்பத்தினருக்காகவும் வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
நடு வயது வரை இவர்களது வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். தேவையற்ற
செலவுகளை குறைத்தால் மற்றவர்களுக்காக கடன் வாங்குவதையும் அதற்காக வட்டி
கட்டுவதையும் தவிர்க்கலாம். நல்ல பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதால் பொது நல
சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள் தெய்வீக
யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும் என்பதால் பயண செலவுகளும் அதிகமாக
இருக்கும். நிரந்தரமான வருவாய் இருக்கும். நிரந்தரமான வருவாய் இவர்களுக்கு
இருக்கும் என்பதால் சம்பாதித்து சேமித்து சந்ததியினருக்கு சேமித்து வைக்க
தவறமாட்டார்கள்.
புத்திர பாக்கியம்,
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர
பாக்கியம் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். அப்படி இருந்தாலும் பெண் குழந்தைகள்
யோகமே இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்படும்
பின்பு சரியாகும்.
தொழில்,
துலா ராசியில் பிற்ந்தவர்களுக்கு அரசியல் அல்லது அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். போலீஸ் துறை , இராணுவத்துறை , பதிப்பாசிரியர்கள், பத்திரிகைதத் துறை, ஓட்டல், தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வெகு சீக்கிரத்தில் உயர்ந்த அந்தஸ்தினை பெறுவார்கள். இவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்த்த பின்னரே எதிலும் ஈடு படுவார்கள். என்றாலும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடும்போது கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பார்கள். மற்றவர்களின் கைகிபிடித்து கால் பிடித்து முன்னேறுவது பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கொடுத்து உதவுவார்கள். இவர்களும் சலுகைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து விடுவார்கள்.
உணவு வகைகள்,
துலா ராசியில் பிறந்தவர்கள் நிறைய காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கொழுப்பு பொருட்கள், எண்ணெய் வஸ்துகள் போன்றவற்றை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 4,5,6,7,8
நிறம் - வெள்ளை, பச்சை
கிழமை - வெள்ளி, புதன்
திசை -தென் கிழக்கு
கல் -வைரம்
தெய்வம் - லக்ஷ்மி
No comments:
Post a Comment