பிறந்த தேதியும் நவரத்தினங்களும்
ஒரு மாதத்தில் 1 லிருந்து 30 அல்லது 31 தேதிகள்
உள்ளது. இதில் செப்டம்பர், ஏப்ரல், ஜுன், நவம்பர் ஆகிய மாதங்களில் 30 நாட்கள்
வரும்.
பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களாகும். லீப் வருடம்
என்றால் 29 நாட்கள் வரும். இதுவும் 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்.
ஜனவரி, மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர்,
டிசம்பர் ஆகிய மாதங்களில் 31 நாட்கள் வரும்.
ஒருவர் 1,10,19 ஆகிய தேதிகளில் பிறக்கிறார்
என்றால் அவர் 1ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது சூரியனின்
ஆதிக்கத்திற்குட்பட்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய
நவரத்தினம் மாணிக்கமாகும்.
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவர்
2ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராவார். இது சந்திரனின் ஆதிக்கமாகும். இந்த
எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் முத்தாகும்.
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3ம்
எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது குருவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும்.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் புஷ்ப ராகமாகும்.
4,13,22 ஆகியவை 4ம் எண்களாகும். இவை ராகுவின்
ஆதிக்கத்திற்குட்பட்டதால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கோமேதகமாகும்.
5,14,23 ஆகிய 5ம் எண்களாகும். இவை புதனின்
ஆதிக்கத்திற்குட்பட்டவை யாதலால் இவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மரகத பச்சை.
6,15,24 ஆகியவை 6ம் எண்களாகும். இவை சுக்கிரனின்
ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைரமாகும்.
7,16,25 ஆகிய 7ம் எண்களாகும். இவை கேதுவின்
ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைடூரியம்.
8,17,26 ஆகியவை 8ம் எண்களாகும். இவை சனியின்
ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம்
நீலக்கல்லாகும்.
9,18,27 ஆகியவை 9ம் எண்களாகும். இவை செவ்வாயின்
ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டியது பவளமாகும்.
No comments:
Post a Comment