ஒவ்வொரு பெண்ணுமே தனக்கு வரக்கூடிய கணவர் இப்படி
இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என பல கனவுகளை காண்பார்கள். பழங்காலத்தில்
எல்லாம் தம்முடைய பெண்ணை வெளி இடங்களில் கொடுக்காமல் தாய் வழி உறவுகளிலோ, தந்தை வழி
உறவுகளிலோ தான் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள். அப்பொழுதுதான் வாழையடி
வாழ¬யாக நம் இனம், மதம் தழைக்கும் ! சொத்துக்களும் வெளியே சொல்லாது என்பது
அவர்களின் நம்பிக்கை.
சில குடும்பங்களில் பெண் குழந்தைகள்
பிறந்தவுடனேயே இவள் என் மருமகள் என முன்பதிவு செய்து வைத்து விடுபவர்களும் உண்டு.
இப்படி சொந்தத்திற்குள்ளேயே திருமணம் அமையக்கூடிய வாய்ப்பு யாருக்கு அமையும் என
பார்க்கும் போது 5,9 ம் வீடுகளில் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் வீட்டில் புதன்
பகவான் சுப சாரம் பெற்று வலுவாக அமையப்பெற்றால் 7ம் அதிபதி புதனாக இருந்தாலும்
தாய்மாமனை மணக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று
சுபசாரத்துடன் குரு போன்ற சுப கிரகப் பார்வைப் பெற்றிருந்தால், தந்தை வழி உறவில்
திருமணம் நடைபெறும். 7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் பலமாக இருந்தோ, 7ம்
அதிபதியாகி பலம் பெற்றோ சுப பார்வையுடனிருந்தால் தாய் வழியில் திருமணம்
கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக 5,9 ம் பாவங்கள் பாதிக்கப்படாமல்
இருந்து, 7ல் சுப கிரகங்கள் அமைகின்றபோது சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ மண
வாழ்க்கை உண்டாகும். ஒரு சில பாவக்கிரகங்கள் 7ல் அமைந்திருந்தாலும், 7ம் வீட்டிற்கு
சுபபார்வை இருந்தால் பருவ வயதில் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தசாவோ, புக்தியோ
நடைபெற்றால் ஜாதகி பிறந்த ஜாதியிலேயே தூரத்து சொந்தத்தில் திருமணம்
நடைபெறும்.
No comments:
Post a Comment