Saturday, 25 August 2012

சூரியனும் அஸ்தங்க தோஷமும்



நல்லதொரு வாழ்க்கை அமைய நவகிரகங்களின் அருள் மிகவும் அவசியம், நவகிரகங்கள் பலம் இழந்தால் நற்பலன் அடைய இடையூறுகள் ஏற்படும்.கிரக பலம் பலவினத்தை பெறுத்தவரை சில கிரக சேர்க்கை கூட பலவீனமான பலனை ஏற்படுத்துகிறது. அதில் கூறிப்பாக நவகிரகங்களில் தலையாய் கிரகமான சூரியன் சேர்க்கை பெறும் கிரகங்கள் அஸ்தங்க தோஷத்தால் பலம் இழக்கிறது. மிகவும் உஷ்ண கிரகமான சூரியன் தனது உஷ்ண தன்மையால் தன்னுடன் இணையும் கிரகங்களை சக்தி இழக்க வைக்கிறது அப்படி சூரியன் சேர்க்கை பெற்று ஜெனன ஜாதகத்தில் அமைய பெற்றால் ஏற்படும்
பிரச்சனைகளை பற்றி பார்ப்போமா அதாவது
சூரியனுக்கு 12 டிகிரிக்குள் சந்திரன் அமைய பெற்றால் மன குழப்பம்,ஜல தொடர்புள்ள நோய்கள் உண்டாகிறது. சூரியன் சந்திரன் இனைந்து இருந்தால் அமாவாசை ஆகும்.

 சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ரத்த தொடர்புள்ள நோய், சகோதர தோஷம்,வெட்டு காயங்கள் ஏற்படும் அமைப்பு யாவும் உண்டாகும்.பெண் ஏன்றால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.
சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் தாய் மாமனுக்கு தோஷம்,நரம்பு பலவீனம் ஏற்படும்.புதன் சூரியன் சேர்க்கை புதாதித்திய யோகத்தை தரும் என்பதால் கல்வி சிறப்பாக இருக்கும்.பொதுவாக புதன் அஸ்தங்கம் அதிக கெடுதலை தருவதில்லை

 சூரியனுக்கு 11டிகிரிக்குள் குரு அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் புத்திர தோஷம், கொடுக்கல் & வாங்கலில் பிரச்சனை,பெரியோர்களிடம் கருத்துவேறுப்பாடு,முன்னோர் சாபத்தால் முன்னேற தடை போன்றவை உண்டாகும்

 சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் சுக வாழ்வு செகுசு வாழ்வு பாதிப்பு , பால் வினை நோய்,இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை,பெண்களால் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.

 சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, உடல் பலவீனம், வேலையாட்களால் பிரச்சனைகள்,கடன் பிரச்சனைகள் யாவும் ஏற்படும்.

 எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது சூரியன் பலம் இழந்து விடுகிறார்.சூரியன் ராகு சேர்க்கை பெறும் போது கிரகண தோஷம் உண்டாகிறது,இதனால் தந்தைக்கு கெடுதி பெரியோர்களிடம் கருத்து வேறுப்பாடு சட்ட சிக்கல் யாவும் ஏற்படும்

  சூரியனுக்கு மிக அருகில் அதாவது 1 டிகிரிக்குள் அமையும் கிரகங்கள் அதிக கெடுதலை தருகின்றனர், சூரியனுக்கு அருகில் கிரகங்கள் அமையும் போது பாவீனமான பலனை தரும் என்றாலும் அஸ்தங்கம் பெறும் கிரகம் பரிவர்த்தனை பெற்றால் கெடுதலை தராமல் நற்பலனை உண்டாகும்

No comments:

Post a Comment