Wednesday, 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 179


சாற்றினேன் கும்பத்தில் பிறந்தோன்ஞானி
சார்வான துலையதுவும் சாஸ்திரவல்லோன்
போற்றினேன் புதனதுவும் கேந்திரகோணம்
பொல்லாத சனியனுமே துலங்கவேண்டும்
தூற்றினேன் கலைமதியும் லெக்கினகேந்திரம்
சொற்பெரிய நரகுருவும் வாக்கில் நின்றால்
சாற்றினேன் பண்டிதனாம் கோசரநூலால்
சார்வான புலிபாணி சாற்றக்கேளே.


மேலும் ஒரு கருத்தினைக் கூறுகிறேன் கேட்பாயாக! கும்ப இலக்கினத்தில் பிறந்தோன் சிறந்த ஞானியாவான். அதேபோல் துலா லக்கினத்தில் பிறந்தவன் சாஸ்திரத்தில் வல்லவனாக அமைவன். ஆயினும் புதனும்சனியும் கேந்திர கோணங்களில் இருக்க வேண்டும். சந்திரன் கேந்திரம் பெற்று வாக்கிற் பெரிய குருபகவான் வாக்கு ஸ்தானத்தில் நின்றால் அச்சாதகன் பண்டிதனேயாவான், மாட்டுவாகடம் முதலிய வளைதல் இல்லாத நன்நூல்களை ஆராய்பவன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment