குரித்திட்டே நட்டமத்தின் செயலேயானால் |
மேலும் ஒரு விஷயத்தைக் குறித்துச் சொல்வேன். அதை நீ நன்கு உணர்ந்து கேட்பாயாக! அட்டமாதிபதி செயலாகி அதுவும் கொடிய பித்த நாடியானால் அதனால் பிணியும் உண்டென்றால் அச்சென்மன் மரிப்பான். அதனால் அவனுக்கு மருந்து எதுவும் வேண்டாம். மற்றும் சஷ்டமம், 12 என்ற விரயத்தானம் இவருக்கு உரியதாக அதுவும் வாத நாடியாகி அந்நாடியும் சிறப்பாக நடைபெறாமல் மாறி நடக்குமானால் அச்சென்மனுக்கு மருந்துதனைத் தருவாய் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment