Wednesday, 8 August 2012

பொம்பள வீக்னெஸ் இல் இருந்து திருந்தி வாழ ஜோதிட பரிகாரம் என்ன?


ஜாதகத்தில் 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது அவருக்கு ஏழரைச் சனி நடந்தால், அவர் எப்படி வாழ்ந்தாலும் உடல் இச்சைகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கிக் கொள்வார்.

அதுபோன்ற மோசமான தசை நடக்கும் போது மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும் அல்லது மறையும்.

எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும்.

அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்.

No comments:

Post a Comment