Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 170


சொல்லப்பா செம்பாம்பு கோணம்லாபம்
சுயதேச பரதேச அரசர்லாபம்
சொல்லப்பா செம்பாம்பு பொல்லாதப்பா
சிவசிவா சொர்ணங்கள் மனையும் சிக்கும்
இல்லப்பா யிந்திரனார் பதவிகிட்டும்
இல்லறத்தில் வல்லனடா குணிதம்பார்ப்பன்
புல்லப்பா கருநாகம் கேந்திரங்கள்
புனிதமுள்ள செம்பாம்பின் பதியைப்பாரே.


மேலும் ஒன்றினை நீ கூறுவாயாக! செம்பாம்பு எனப் புகலப்படும் கேதுபகவான் 1,5,9 ஆகிய கோண ஸ்தானத்திலும், லாபத்திலும் நிற்க அச்சாதகன் சுயதேச பரதேச வாசம் கொள்வான். அச்செம்பாம்பாகிய கேது மிகவும் பொல்லாதது ஆயினும் அச்சென்மனுக்கு சிவபரம் பொருளின் பேரருட் கருணையினால் தங்க நகைகளும் நன்மனையும் ஏற்படுவதோடு தேவருலகில் இந்திர பதவியும் கிட்டும். இல்லறம் நடத்துவதில் வல்லவன். இவன் சி’றந்த ஜோதிடன் என்று திடமாகக் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment