சகுனம் தொடர்பில் தீர்மானிப்பதில் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. நம்மை நாமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் அர்த்தமாகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
இந்தத் தேங்காய் உடையும் விதத்தில் சகுன ஜோதிடம் பல விடயங்களை உணர்த்துகிறது. தேங்காயின் ஓடு மட்டும் தனியாக வந்தால், சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக பொருள் நஷ்டம் உண்டு என்று அர்த்தம்.
ஒருவேளை தேங்காய் அழுகியிருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, நோய் ஏற்படும். குறிப்பாக தேங்காய் அழுகியுள்ள சதவீதத்திற்கு ஏற்ப அவரது உடலில் பாதிப்பு ஏற்படும் என சகுன ஜோதிடம் கூறுகிறது.
இதேபோல் அழுகியுள்ள பகுதியின் சதவீதத்திற்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் நாள் தொலைவில் உள்ளதா? அருகில் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் அழுகினால் ஒரு சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment