Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 169


கேளே நீசேல் கன்னி யெருதுமேடம்
கெதியுள்ள மகரமடா கடகந்தன்னில்
கூளே நீ கரும்பாம்பு அதனில் தோன்ற
கொற்றவனே யோகங்கள் புகழ்ந்திடாதே
சீளே நீகிரகங்கள் நான்குதிக்கில்
சிவசிவா சென்மனுக் கமைந்திருந்தால்
ஆளே நீயோகங்கள் கூறு அல்லால்
அப்பனே அஸ்தகிரி யோகஞ்சாற்றே.


மேலும் ஒன்றை நீ மனங்கொண்டு கேட்பாயாக! மீனம், கன்னி, ரிஷபம், மேடம் நற்கதியுள்ள மகரம் மற்றும் கடகம் தன்னில் கரும்பாம்பு எனப் பகரப்படும் இராகு நிற்பின், அதனால் வெகு நன்மையான யோகங்கள் வாய்த்திடும் என்று புகழ்ந்து கூறாதே. இனி, சிறப்பு என்னவெனில் நான்கு திக்கிலும் கிரகங்கள் கூடி நிற்பின், அச்சென்மனுக்கு யோகம் உண்டென்று கூறுவாயேயன்றி அச்சென்மனுக்கு அஸ்தகிரி தோடம் என்று சிவபரம் பொருளின் அருளாணையால் கூறுக என்று போகர் அருள்பெற்ற புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment