Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 168


கோசாரம்கேளப்பா குருமூன்றில் குலைதானெட்டு
கேடுசெய்யும் சனிசென்மம் புந்திநாலில்
சீளப்ப சேயேழு செங்கதிரோன் ஆறஞ்சும்
சீரிவருங் கரும்பாம்பு நிதியில் தோன்ற
ஆளப்பா அரசகுரு ஆறிலேற
அப்பனே திசையினுட வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோசாரத்தாலே
குழவிக்கு நிராயணங் கூற்ந்து சொல்லே.


இன்னுமொரு விஷயத்தையும் நான் கூறுகிறேன். இதனையும் நன்கு கேட்பாயாக! ஒரு சாதகனுக்கு இலக்கினத்திற்கு மூன்றில் அமைந்து கேடு செய்யும். குரு சனி ஜென்மம் தன்னிலும் புதன் நான்கிலும், சேய் என்று கூறப்படும் செவ்வாய் ஏழிலும், சிவந்த கதிர்களைக் கொண்ட சூரியன் 6,5 ஆகிய இடங்களிலும், சீறி வரக்கூடிய இராகுவெனும் கரும்பாம்பு 2-ஆம் இடத்தில் நிற்கவும் அசுர குருவான சுக்கிரன் ஆறாம் இடத்தில் மேவவும் நீ அச்சென்மனுடைய திசையையும் புத்தியையும் வலுவையும் அறிந்து கூறாவிட்டால் குற்றம் நேருவது உண்மையே. இது கோசார பலம் என்று நீ உணர்தலோடு, அக்குழவிக்கு நிராயணம் (மரணம்) என நன்கு ஆராய்ந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment