புகழ்கின்ற ஈராறு யிருநான்கேழில் |
எல்லாராலும் புகழப்படும் 12,8,7,2,4 ஆகிய இடங்களில் பரிதிமைந்தனாகிய சனிபகவான் நிற்க ஏற்படும் பலன்களாவன: நான்கில் நிற்பின் அன்னைக்குக் கண்டம், வாதநோய் உண்டாம். நாய் கடிக்கும் என்றும் 2,7 ஆகிய இடங்களில் நிற்க அவனால் மனைவி நஷ்டம் மற்றும் 8-இல் நிற்க உயிர்க்குச் சேதமும் 12-இல் நிற்க கன்று காலிகள் நஷ்டமாதலால் விரயமும் துன்பமும் உண்டாம் என்று கூறுவாயாக! போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment