Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 148


பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
பாங்கான மூடன் சஞ்சார நாளில்
சீரப்பா சிரநோயும் அம்மைபேதி
சிவசிவா சலபயமும் பொருளுஞ்சேதம்
கூறப்பா குடியோடிப் போகச்செய்வன்
கொற்றவனே குடும்பத்தில் களவு போகும்
வீரப்பா வெகுபோர்க்கு கொடியோனாகி
விளங்குவோன் புவிதனிலே விளம்பக்கேளே.


வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு 12, ஜன்மம் (1),2 ஆகிய இட்ங்களில் பிரசித்தமுள்ள முடவன் என்னும் சனிபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டுச் சனியின் காலம் என்பர். இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலியும் அம்மை, பேதி என்று கூறும் கொள்ளை நோயும் ஜலபயமும், பெரும் பொருட்சேதமும் ஏற்படும். குடும்பத்தில் களவுபோதலும், உண்டாம். இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கும் கொடியவனாக விளங்குவான் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment