Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 149


கேளப்பா கடகம்தேள் சிம்மம்ஜென்மம்
கெடுதி மெத்தசெய்வனடா வேதைதானும்
நாளப்பா நலமாகும் மற்றராசி
நரச்சுகமும் கிட்டுமடா வேட்டலுண்டு
கூளப்பா கோதையினால் பொருளுஞ்சேதம்
கொற்றவனே கடன்வந்து தீருமென்றே
ஆளப்பா திசைபாரு வலுவைநோக்கி
அப்பனே முடவன்செய் வலுவைகூறே.


மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! வேதை என்று விளம்பப்படும் சனிபகவான் கடகம், விருச்சிகம், சிம்மம் ஆகிய இவ்விராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்களுக்கு நன்மையே ஏற்படும். இனஜன பந்துக்களால் சுகம் கிட்டும் எனினும் கண்பார்வையும் உண்டு. பெண்ணால் பொருட்சேதம் ஏற்படும் என்றும் இச்சாதகன் கடன் படுவான் என்றும் கிரகபலத்தையும் திசாபுத்தி வலுவையும் நன்கு ஆராய்ந்து சனிபகவானின் பலத்தைக் கூறுவாயாக என்று போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment