Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 147


கூறினேன் ஆறோனும் மலைக்கிரெண்டில்
கொற்றவனே யெதிரியுட பொருளுஞ்சேரும்
நீரேநி குடும்பாதி விழுந்துகெட்டால்
நிலத்தில் நல்லகளவாளி வஞ்சகன் பொய்யான்
ஆரே நீ தனபதியும் ஆறிலேற
அப்பனே யெதிரிக்கி அவைபோல்செப்பு
பாரேநி போகருட கடாட்சத்தாலே
பண்பாக புலிப்பாணி பகர்ந்தேன்பாரே


மற்றொரு கருத்தையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஆறுக்குடையவன் இரண்டில் இருப்பின் அச்சாதகனுக்கு எதிரியினுடைய பொருளும் தனமும் வெகுவாகச் சேரும். அதே சமயம் இரண்டாம் பாவாதிபதி கெடுவானாயின், அச்சாதகன் நல்ல களவாளியென்றும் வஞ்சகன் பொய்யன் என்பதையும் வகையாக உணர்ந்து கொள்க. அதேபோல் 2-க்குடையவன் ஆறாமிடத்தை அடைந்து நிற்க அச்சாதகனின் எதிரிக்கு மேற்குறித்த பலன்களைச் செப்புக என்று போகரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment