Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 144


கூறினேன் குருவெள்ளி சனிமால் இந்து
கொற்றவனே சேர்ந்திருக்க அங்கயீனம்
தேரினேன் தேவகுரு புந்தியோடு
திடமாக மதிவெள்ளி சேர்ந்துநிற்க
ஆரினேன் கைபொருளும் நிலமுஞ்செம்பொன்
அப்பனே கிட்டுமடாஅவனில்வாழ்வான்
சீரினேன் போகருட கடாட்சத்தலே
சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே


மேலும் ஒரு கருத்தினைக் கூறுகிறேன் கேட்பாயாக! பெருமை வாய்ந்த குருபகவானும் அசுரகுருவான சுக்கிரனும் சனி, புதன், சந்திரன் ஆகியோர் சேர்ந்திருக்க அங்கஹீனம் ஏற்படும். ஆனால் தேவகுரு புதனோடு திடம் பொருந்திய சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு அனேகமான திரவியமும் நிலமும் செம்பொன்னும் வாய்த்து பூமியில் சுபீட்சத்துடன் வாழ்வான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment