ஆசப்பா அம்புலியும் வெள்ளியோடு |
பெருமைக்குரிய சந்திரன் சுக்கிரனோடு கூடி நிற்க அவர்க்கு அடைவாக தேவகுருவும் புதனும் செவ்வாயும் சேர அச்சாதகன் குலமகன் என்றே கூறவேண்டும். இப்பாக்கியத்தைக் கிரகங்கள் நல்கும். இந்நிலவுலகில் இவனுக்கு பெருநிதியும் செல்வாக்கும் அதிகம் உண்டாகும். இச்சாதகன் நிறையப் பேரை ஆதரித்துப் பிரபலனாய் இப்புவியில் வாழ்ந்திருப்பான், என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment