Monday, 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 139


விளம்பினேன் வெண் மதிசேய் புந்தியோடு
வெய்யவனும் வியாழனும் சேர்ந்துநிற்க
விளம்பினேன் வினயனடா சென்மன் தானும்
வெகுபேரைக் கெடுத்திடுவன் கோள்சமர்த்தன்
விளம்பினேன் வெய்யனும் சேய்கன் நீலன்
வீற்றிருக்க வீடுதொறும் பலியேகொள்வன்
விளம்பினேன் போகருட கடாட்சத்தலே
விதமான் புலிப்பாணி விளம்பினேனே.


வேறொரு கருத்தினையும் கூறுகிறேன் கேட்பாயாக! சந்திரனும்,செவ்வாயும், புதனும், சூரியனும், குருவும் சேர்ந்து நிற்கப்பிறந்த சாதகன் வினைவல்ல தீயன். பலரையும் அவன் கெடுத்திடுவான், கோள் சொல்வதில் சமர்த்தன். அதே போல் சூரியனும், செவ்வாயும், சுக்கிரனும், சனியும் ஒரே வீட்டில் தனித்திருக்க அச்சாதகன் வீடுதோறும் பிச்சையேற்று உண்பான் என்பதையும் போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment