Monday, 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 140


ஆச்சப்பா அம்புலியும் வியாழன்புந்தி
அடைவாக சேர்ந்திருக்க சென்மந்தானும்
ஆச்சப்பா அழகனடா நிதியுமுள்ளோன்
அயன்விதியு மெத்தவுண்டு அரையக்கேளு
ஆச்சப்பா அம்புலியும் புந்திவெள்ளி
அடைவாக மூவர்களும் சேர்ந்து நிற்க
ஆச்சப்பா அழும்பனடா காமிதுஷ்டன்
அப்பனே புலிபாணி அரைந்திட்டேனே


மற்றொரு செய்தியையும் உன் மனங்கொள்ளுமாறு கூறுகிறேன். நன்கு கவனித்துக் கேட்பாயாக! சந்திரனும், குருபகவானும், புதனும் ஒரு மனையில் அடைவாகச் சேர்ந்திருக்கப் பிறந்த சென்மன், நல்ல அழகுடையவன்; நிதியுடையவன்; தீர்க்காயுள் உடையவன் என்றே கூறுக. அதேபோல் சந்திரனும் அழும்பன் என்றும் காமி என்றும் துஷ்டன் என்றும் பேர் பெற்று இந்நிலவுலகில் நிலவுவன் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment