Monday, 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 138


தானப்பா யின்னமொரு புதுமைகேளு
தனமென்ற இரண்டதனில் விரையன்நிற்க
ஊனப்பா உப்பரிகை மாடகூடம்
உத்தமனே கட்டுவன் உதயம்பாரு
யேனப்பா யெங்கோனும் யிந்துபுத்தி
யிதமுள்ள சுக்கிரனு மில்லுமாகில்
சீனப்பா செம்பொன்னும் சென்றாண்டு
சிவசிவா சித்திரமும் திசையில்சொல்லே


மேலும் ஒரு புதுமையினைக் கூறுகிறேன். இதனையும் நீ நன்கு உணர்ந்து கேட்பாயாக! தனஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்தில் விரயாதிபதியானவன் நிற்பின், அச்சாதகன் உப்பரிகையுடன் கூடிய மாட கூடம் அமைத்துக் கட்டுவன், அவன் உத்தமனே அவனது இலக்கினபலத்தையும் அறிந்து கூறுக. அவ்விலக்கினாதிபதி குருவோ, சந்திரனோ, புதனோ, சுக்கிரனோ அவர்தம் இல்லுக்கு ஏற்ற வகையில் செம்பொன் சேரும் என்று திசாபுத்தி அறிந்து சிவபரம் பொருளின் கருணையிது வென்று கூறுக என்று போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment