Tuesday, 7 August 2012

அட்சய திருதியில் தங்கம் வாங்கணுமா? அவசியமில்லை என்கிறது ஜோதிடம்!





அட்சய திருதியை தினத்தன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும், அப்போது தான் செல்வம் கொழிக்கும் என்பது பலரது கருத்து. ஆனால் அக் கருத்தை மறுக்கிறது ஜோதிடம்.

அட்சய திருதியை தினத்தில் மங்களகரமான, லட்சுமிகரமான பொருட்களை வாங்குவதே வாழ்வு சிறக்க உதவும்.

அட்சய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்உப்பு ஆகியவைதான்.

நம் நாட்டு மக்களிடையே தங்கம் மிகவும் மதிக்கப்படும் பொருளாக உள்ளது. தாலி செய்வதும் தங்கத்தில் தான். எனவே, தங்கம் மங்களகரமான பொருளாகத் திகழ்கிறது. ஆகவே தங்கமும் வாங்கலாம் (தங்கம் தான் வாங்கவேண்டும் என்று இல்லை)

No comments:

Post a Comment