ஜாதகத்தில் உச்சம் பெற்ற சூரியனு டன் குரு மற்றும் கேது இருந்தால் - ஜாதகரின் செல்வத் திற்கோ, செல்வாக்கிற்கோ குறை இருக் காது. ஜாதக ராசியான குரு, உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியன், அந்த ஸ்தான நிலையைக் குறிக்கும் ஞானகாரகன் கேதுவுடன் சேர்வதால் புகழ், செல்வத்திற்கு பாதிப்பு இல்லை. ஆனால் கால புருடத் தத்து வப்படி புத்திரஸ்தானாதிபதி சூரியன், காரகன் குரு இவர்களுடன் கேது சேர்வதால் இந்த ஜாதக ருக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புக் குறைவு என்று கூற முடியும்.
ஜாதகத்தில் சூரி யன் உச்சம் பெற்று, குருவுடன் சேர்க்கை, குரு - செவ்வாய் பரிவர்த்தனை இருந்தால் - சூரியன் ஜாதகரின் தகப் பனாரைக் குறிக்கும். புகழ் மதிப்பிற்கு காரகத்து வம் வகிக்கும் குருவுடன் சேர்க்கை ஆகிறது. அதேசமயம் குரு தர்மம், ஈகைக்கு காரகத்துவம் வகிக்கும். ஆக, இவரது தகப்பனால் ஈகை, தர்மம் ஆகிய நற்பண்புகள் காரணமாக புகழ், கீர்த்தி பெறுகிறார். அதேசமயம் குரு-செவ்வாய் பரிவர்த் தனை காரணமாக, செவ்வாய், மேஷத்திற்கு வரு வதால் ஈகைக்குணம் மாறி, கர்வம் தலைதூக்குகி றது. அதன் காரணமாகப் புகழை இழக்கிறாரா என் பதை மற்ற கிரகங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
ஜாதகத்தில் உச் சம் பெற்ற சூரியனுடன் சனி சேர்க்கை மற்றும் செவ்வாய்-சனிப் பரிவர்த்தனை இருந்தால்- சூரி யன், ஜாதகரின் தகப்பனாரைக் குறிக்கும். அவர் உச்சம் என்பதால் தகப்பனார் நல்ல கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர் என்றும், சனியின் சேர்க் கையால் பல தொல்லைகளுக்கு ஆளாகிறார் என்றும் காணலாம். அதேசமயம், சூரி யன் அரசாங்கத்தைக் குறிக் கும். அவருக்கு அரசாங்க ஆதரவும் இருந்தி ருக்கும். சனி, செவ்வாய் பரிவர்த் தனை காரண மாக அதி காரம், அந் தஸ்துள்ள அதிகாரியாக இருந்து மதிப்பு மரி யாதையுடன் இருந்திருப் பார்.
ஜாதகனுக்கு முற்பகுதி தொழி லில் பல கஷ்டங்களைக் கொடுக்கும் பரிவர்த்தனை காரணமாக சனி, தனது ஆட்சி வீட்டுக்கு வருவதால் பிற்பகுதியில் சாதக மான நிலை ஏற்பட்டு சிறப்பாக வாழ்வார் என்று உறுதிபடக் கூறலாம்.
சந்திரனை குறிக்கும் சில காரகத்துவங்கள் மனம், தாயார் திருமணத்திற்கு பிறகு மாமியார் ஏமாற்றுதல், ஏமாறுதல், அபவாதம்.
சந்திரனைப் பற்றி சில சோதிட கருத்துக்கள் உண்மையில் சந்திரன் ஒரு கிரகம் அல்ல, பூமியை சுற்றும் ஒரு உபகிரகம். பல கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பல கிரகங்களில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் வருகின்ற மின் அலைகளை கிரகித்து பூமியின் மேல் பாய்ச் சும் வேலையை சந்திரன் செய்கின்றான். எனவே சந்திரன் சுயமாக பின் அலைகளைப் பாய்ச்சுவது இல்லை. எனவே தான் சந்திரனைக்கொண்டு நம் நாட்டு சோதிடமுறையில் கோச்சார முறையில் பலன் காணப்படுகிறது.
நீருக்கு நிறமில்லை, நீருக்கு ருசி இல்லை, அதேசமயம் நீரை எந்த நிற டம்ளரில் ஊற்றுகி றோமோ அந்த கலராக தெரியும். எந்த (சர்க்கரை அல்லது உப்பு) கலக்கிறோமோ அந்த ருசியைத் தரும்.
அதுபோல சந்திரன் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் நிற் கிறாரோ அந்த கிரகத்தின் தன்மையை அடைகிறார்.
குறிப்பு:
ஒரு காரக கிரகத்திற்கு 2,3,5,7,9,11ல் ஏதாவது ஒரு கிரகம் இருந்து அது நட்பு கிரகமானால் நன்மையான பலனும், பகை கிரக மானால் கெட்ட பலனும் நடக்கும் என்பது நாடி விதி. குருவும் சனி யும் 3ல் இருக்க, சந்திரனுக்கு பார்வை எதிர்பார்வை கொடுக்கின்ற னர். கால புருஷ தத்துவப்படி குரு 9ம் வீட்டுக்கு உரியவர்.
சனி 10ம் வீட்டுக்கு உரியவர். எனவே தர்ம, கர்மாதிபதிகள் சந் திரனை பார்க்கின்றனர். எனவே தர்ம கர்மாதி யோகத்தை பெரும் தாயார் காரகன் சந்திரன். ஆகவே இவரது தாயார் பேறும், புகழும் பெறுவார். நேர்மையான வழியில் நடப்பார் எனக் கூறலாம்.
ஜாதகனை குறிக்கும் குரு, உச்சம் பெற்று இருப்பதால் நல்ல நிலையில் தான் இருப்பார். அதே சமயம் சனி அதே வீட்டில் உள் ளார் (தொழிலுக்கு காரகன்) சந்திரனின் பார்வை, சனிக்கும் கிடைக் கிறது. சந்திரன் கவனத்திற்கு காரகன் அதனால் தொழிலை அடிக் கடி மாற்ற வேண்டிய நிலை ஜாதகனுக்கு ஏற்படும்.
குறிப்பு:
சனி இவரின் 26 முதல் 28 ரிசபத்திற்கு வரும் சமயம், இந்த நிலை ஏற்படும். எப்படி ஏற்படுகிறது குருவானவர், இவரது 26வது வயதில் கன்னியில் சஞ்சரிப்பார்.
கன்னிக்கு திரிகோண ராசியான ரிஷபத்தில் சந்திரன் அதே சமயம் 26ஆவது வயதில் சனி, சந்திரனுடன் சேர்ந்து, ரிஷபத்தில் இருப்பார். பிறந்த ஜாதகத்தில் உள்ள குரு, சனி, சந்திரன் சேர்க்கை இவரது 26வது வயதில் ஏற்படுகிறது. அதனால் அந்த சமயத்தில் நிகழும் என கால நிர்ணயம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment