Monday, 13 August 2012

நாடி சோதிடம் பாகம் - 6

நாடி ஜோதிடம்
நாடி சோதிடம் பாகம் - 6
ராசிக் கட்டத்தில் சூரியன் மேஷத்தில், செவ்வாய் சிம்மத்தில், சனி கன்னியில் என்று இருந்தால், சனியின் பாதிப்பு செவ்வாய் மற்றும் சூரியனுக்கு இல்லை எனக் கருதலாம். அப்படி இல்லாமல் சனி வக்கிர கதியில் இருந்தால் மேலே கூறிய பலன்களே கிடைக்கும்.

அடுத்து, ராசிக் கட்டத்தில் சூரியன் மேஷத்தில், செவ்வாய் சிம்மத்தில், ராகு கன்னியில் அமர்கின்றனர். இந்த ராகுவாகப்பட் டவர், சூரியனுக்கும் செவ்வாய்க்கும் பகைக் கிரகம். ராகு எப்போதும் வக்கிரகதியில் நகர்வார். ஆக, மேலே சொன்ன பலன்களே நடக்கும் என் றாலும், செவ்வாய் என்ற சகோதரர்கள் அதிக பாதிப்பு அடைய மாட்டார்கள்.

அடுத்து ராசிக் கட்டத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம், புதன் மேஷத்தில், செவ்வாய் மிதுனத்தில் இருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இந்த ஜாதகரின் தகப்பனார் மிகுந்த அறிவுள்ள வர், சமுதாய அந்தஸ்தில் உள்ளவராக இருந் திருப்பார். செவ்வாய் பரிவர்த்தனை காரண மாக, அவர் தனது வாழ்க்கையில் முரட்டுத் தன்மையையும் பிடிவாத குணத் தையும் வளர்த்துக் கொள்வார். சகோதரன் செவ்வாய். இங்கு செவ்வாய், புதன் பரிவர்த்தனை, புதன் புத்திசாலித்தனத்திற்கும் வியாபாரத்திற்கும் காரகன். ஆகவே, சகோதரர் வீட்டை விட்டு வெளியேறி, புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்து முன்னேறுவார் எனக் கூறலாம்.
ஜாதக கட்டத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றுத்தான் உள்ளார். ஆனால் உச்ச பலனைத் தரமுடியாது. ஏன் என்றால், சூரியன் பரிவர்த்தனை காரணமாக தனது ஆட்சி வீட்டிற்குச் செல்கிறார். அதன் காரணமாக அங்கே அமர்ந்து உள்ள தனது பகைக் கிரகங்களான சனி மற்றும் ராகுவின் சேர்க்கைப் பெற்று பாதிப்பு அடைகிறார். இதற்கு பலன் கூறுவதானால் சூரியன் தகப்பனாரையும் செவ்வாய் சகோதரனையும் குறிக்கும். இவர் பிறந்த சமயத்தில், செவ்வாய் பகைக் கிரகங்களின் மத்தி யில் இருப்பதால் இவரது மூத்த சகோதரர் மிகவும் கஷ்டமான நிலையில் இருப்பார். இவர் பிறந்த பிறகு பரிவர்த்தனை காரணமாக இடமாற்றம் ஏற்பட்டு சிறிது சாதகநிலை ஏற்படும் எனக் கூறலாம். அதே சமயம், இவர் பிறந்தபோது நல்ல நிலையில் இருந்த சூரியன், பரிவர்த்தனை காரணமாக, சிம்மத்திற்கு தனது பகைவர்களுடன் சேர்வதால் சிறிது காலம் சிரமப்படுவார். குரு மேஷத்திற்கும், சிம்மத்திற்கும் தனுசுவிற்கும் வரும் சமயத்தில் தகப்பனாருக்குப் பாதிப்பு ஏற்படும்.

ராசிக்கட்டத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் நட்பு கிரகங்களுக்குக் கிழக்கு திசையில் அமைந்துள்ளன. அதனால் எந்தப் பாதிப்பும் அடையவில்லை. ஆனால் கன்னியில் உள்ள ராகு சிம்மத்தை நோக்கி நகர்கிறார். அதன் காரணமாக சகோதரனுக்கும் தந்தைக்கும் மரண அவஸ்தை ஏற்படுத்தும். காரணம், ராகு இருவருக்கும் பகைவன் என்பதே.

ராசிக்கட்டத்தில், கிழக்குத் திசையான சிம்மத்தில், செவ்வாய் மற்றொரு கிழக்கு திசையான மேஷத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் அமர்ந்துள்ளன. இதில் ராகுவால் சூரியனும், செவ்வாயும் பலம் இழக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. உதாரணமாக, ராகு தகப்பனாரின் தகப்பனாரைக் (பாட்டன்) குறிக்கும். அதேசமயம், சூரியன் அரசாங்கம் மற்றும் அந்தஸ்தான நிலையைக் குறிக்கும். ஆகவே பாட்டனார் அந்தஸ்தான, கௌரவமிக்க குடும்பத்தில், செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். மேலும் செவ்வாயின் தாக்கத்தால் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருந்திருப்பார்.

சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தில் வாழ்ந்தவர் என்றும் கூறலாம். செவ்வாய் சகோதரன் ஆகையால் தனது சகோதரர்களுடன் சுமுகமான உறவுடன் வாழ்ந்திருப்பார். சில சமயங்களில் அவர்களால் தொல்லைகள் ஏற்பட்டிருக்கும். காரணம் ராகு - செவ்வாய் பகை.

ஜாதகரின் தகப்பனார், ஜாதகரின் தாத்தா சேகரித்து வைத்த கௌரவம், சொத்து, சுகங்களை இழக்கிறார். காரணம், சூரியன் - ராகு மற்றும் சுக்கிரன் பகை. இந்தக் குழந்தை பிறக்கும் நேரத்தில் ஜாதகரின் தகப்பனார் கஷ்ட நிலைக்கு ஆளாக நேரும் எனக் கூறலாம்.

No comments:

Post a Comment