Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 164


தானென்ற பஞ்சமத்தில் கொடியோர் நிற்கில்
தாரணியில் குடிவிளங்க புத்திரரில்லை
ஊனென்ற உதயாதி பெரியோர் சேர
உத்தமனே உதித்ததொரு பாலந்தானும்
தேனென்ற பிதுருக்கு உதவியுண்டோ
பரைச்சேரி வில்வக்கண் முளைத்தாப்போலே
சீனென்ற சிவனுக்கு உதவாதப்பா
சிவசிவா புலிப்பணி செப்பினேனே.


மேலும் ஒன்றைக் கூறுகிறேன். கேட்பாயாக! பஞ்சமஸ்தானம் எனக்கூறப்படும் ஐந்தாம் இடத்தில் தீய கோள்கள் இருப்பின் இப்பூமியின் கண் அச்சாதகனின் குடும்பம் விளக்கமுறச் செய்யும் புத்திரரில்லையென்று கூறுக. இலக்கினாதிபதி சுபர்களுடன் கூடி அதன் பயானாகப் பிறந்த ஒரு பாலனும் அவர்தம் பிதுருக்கு உதவாதவனாக பறைச்சேரியில் வில்வமரம் முளைத்தால் எவ்வாறு பயன்படாதோ அதேபோல் உதவியாக இரான் என்று போகமா முனிவர் பேரருட்கருணை கொண்டு புலிப்பாணிபுகன்றேன். மேலும் இராகு கேந்தரத்தில் இருக்க கேதுவின் நிலையையும் நீ நன்கு ஆராய்வாயாக.

No comments:

Post a Comment