Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 163


பாரப்பா பவுமனுமே வியமாறெட்டில்
பகருகின்ற சுங்கனுமே பகைவன் வீட்டில்
சீரப்பா சென்மனுக்கு செனனபூமி
சிவசிவா சிக்குமடா ஜலத்தால்கேடு
ஊரப்பா ஊரருகில் கிழக்கு மேற்கு
உத்தமனே புஞ்சை நிலத்தாலும் லாபம்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிரிக்குமடா கனகமது கையில்தானே.


மற்றொரு விஷயத்தையும் நீ நோக்குக. சேய் என அழைக்கப்படும் செவ்வாய் 12,6,8 ஆகிய இடங்களில் நிற்க சுக்கிரன் பகை வீடடைய அச்சென்மனுக்கு ஏற்படும் பலன்களாவன: அவனது ஜென்ம பூமி (பிதுர்களின் சொத்து) வந்தடையும், நீரினால் கேடுண்டாதலும் நேரும். ஊருக்கு அருகே கிழக்குத் திசையும் மேற்குத்திசையும் உத்தமமான நற்பலன் தரும். அதோடு புஞ்சை நிலத்தால் வெகுலாபம் ஏற்படும். போகரது அருளாணைப்படி அச்சென்மன் கையில் தங்கமானது ஜ்வலித்துச் சிரிக்கும் என்று அவரருளாலே புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment