Tuesday, 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 157




பூட்டுகிறேன் இன்னமொன்று புதுமைகேளு
புகழ்பெரிய ஈரிரண்டுக் குடையோனின்ற
ஆட்டுகிறேன் அப்பதிக்கி பத்தோன் தானும்
அப்பனே இரையோனைக் கூடிட்டாலும்
கூட்டுகிறேன் குழவிக்கி பூமிமெத்த
குவலயத்தில் பேர்விளங்கும் போகவானாய்
பூட்டுகிறேன் போகருட கடாட்சத்தாலே
பூதலத்தில் இரவியோனைப் பார்த்துச்சொல்லே


இன்னொரு ரகசியத்தையும் புதுமையாகக் கூறுவேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு நான்கிற்குடையவன் நின்ற பதிக்குப் பத்தோன் தானும் இரவிதனைக் கூடிட்டாலும் அச்சாதகனுக்கு பூமிலாபம் மிகவும் ஏற்படும். பூதலத்தில் அவன் பேரும் புகழும் பெறுவான். போகவானேயோவான். ரவி நின்ற நிலையையும் கிரகபலத்தையும் ஆய்ந்து பலன் கூறுக எனப் போகர் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment