கேளப்பா யின்னமொருபுதுமைகேளு |
இங்கு வேறொரு விவரத்தையும் கூறுகிறேன். நன்கு விளக்கமாகக் கேட்பாயாக! இராகு என்ற கரும்பாம்பு 1,4,7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலோ, 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்திலேயோ அந்த வீட்டிற்குடையவன் சுபருடன் கூடினாலோ சுப கிரகங்களின் திருஷ்டி பெறிலோ அச்சாதகனுக்குச் சிறப்பான யோகமே யுண்டாகும். சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் திடமான யோகம் உண்டென்பதை இலக்கினாதிபதி சேர்ந்து நிற்பது கண்டு அந்தப் பலனைக் கூறுக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment