பாரப்பா யின்னமொன்று பகரக்கேளு |
இன்னுமொரு புதுமையையும் கூறுகிறேன் கேட்பாயாக! பூர்வபுண்ய ஸ்தானத்தில் அதாவது ஐந்தாம் இடத்தில் கரும்பாம்பு இராகு நின்றால் புத்திரதோஷம் அச்சென்மனுக்கு ஏற்படும். இத்தோஷத்தை நீக்கும் விவரத்தை என் மகனே உனக்குச் சொல்வேன். இத்தோஷம் பெற்றவனின் மனைவி அரசமரத்தைச் சுற்றி குற்றமில்லாக் கன்னியர்க்கு உத்தம ஸ்தானம் செய்து வணங்க அத்தோஷம் விலகுவதோடு நல்ல ஆயுள் பலம் மிக்க புத்திர உற்பத்தி ஏற்படும் என்பதையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment